செவ்வாய், 23 ஜூலை, 2013

முலிகை - அம்மான் பச்சரிசி

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.

அம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண் ,, மலச்ச்க்கள் , , நமச்சல் , பரு ,மறு நீகள் ஆகிய குணம் உண்டு
இதன் பாலை நக சுற்றிக்குதடவ குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.  இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும்  பின் அனைவரும் அது வெறும்  காகிதம்  தான்  எனக்  கூறியதும்  அதைத்  தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு  வித்தைக் காட்ட  இன்னும்  பல  மூலிகைகள்  இருக்கிறது  .

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை. பயன்தரும்.

1 கருத்து:

  1. இந்த செடியை எந்த வகையில் மருந்தாக பயன்படுத்தலாம்? சற்று விளக்கமாக தெரிவியுங்கள். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு