திங்கள், 4 ஜனவரி, 2016

60 வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8 டெக்னிக்'

60 வினாடிகளில் எளிதாகஉறங்க '4-7-8டெக்னிக்' முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்குவினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும்.அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

பயனுள்ள வைத்தியம்

1.துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன்,இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
5. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களைகுறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
6. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
7. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்துஅழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.