திங்கள், 25 செப்டம்பர், 2017

நல்லெண்ணையின் மகத்துவங்கள்

oil bottle க்கான பட முடிவு




 காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெயை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல் :

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்:

 நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.


Buy the best sesame oil under Rs.200: https://amzn.to/350l5Su


உடலுக்கு குளிர்ச்சி :

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

இரத்த அழுத்தம் :

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் :

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்

மனநிலையை மேம்படுத்தும் :

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மூட்டு வலிகள் :

மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள்:

நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பு:  வயிற்றுப்போக்கின் போது நல்லெண்ணெயின் உபயோகத்தைத் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் நீர்வறட்சியை ஏற்படுத்திவிடும். முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, அதற்கான மருந்து மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. மேலும் நல்லெண்ணெய் உங்களுக்கு


Buy the best sesame oil under Rs.200: https://amzn.to/350l5Su

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக