ஞாயிறு, 20 மே, 2018

வரகு அரிசி பலன்கள் :



1. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி கஞ்சி தயாரித்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
2.  சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல், புளியோதரையாக செய்து சாப்பிடலாம்.
3. உடலுக்கு வலிமையை கொடுக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.
4.  உடல் வளர்ச்சி மற்றும் சேதமடைந்த திசுக்களின் வளர்ச்சிக்கு இதில் உள்ள பாஸ்பரஸ் உதவுகிறது.
5. இதில் உள்ள கனிமச்சத்துக்கள், குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.
6.   இந்த வரகு அரிசி உணவினை வழக்கமாக உட்கொண்டால், டைப் 2 நீரிழிவு ஆபத்தை குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
7.  தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
வரகு , பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.
இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.