வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள்

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும். வெற்றிலை - 2 கற்பூரவல்லி - 2 துளசி இலை -2 நல்ல மிளகு - 5 இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பின்னர் காய்ச்சல் குணமாகும் வரை சுக்கு - 3 கிராம் மிளகு - 3 கிராம் திப்பிலி - 3 கிராம் சித்தரத்தை - 3 கிராம் குறுந்தட்டி - 3 கிராம் நறுக்குமூலம் - 3 கிராம் அதிமதுரம் - 3 கிராம் சடமாஞ்சி - 3கிராம் இவை ஒரு வேளைக்கான அளவு இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர, காய்ச்சல் முழுமையாக குணமடையும்.

அல்லது சுக்கு - 1 துண்டு மல்லி விதை - 10 கிராம் சீரகம் - 5 கிராம் சோம்பு - 5 கிராம் இவைகளை நன்றாக இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும். குடிநீரில் சீரகம், ராமிச்சம் வேர் (வெட்டிவேரில் ஒரு வகை) துளசி, மிளகு (லிட்டருக்கு 2 அல்லது 3 மட்டும்) போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் இந்த நோய் எளிதில் தொற்றாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.


சனி, 7 பிப்ரவரி, 2015

முள்ளங்கி -



முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.
முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.
முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.
முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.
முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.
பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.
முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.
முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்

ஆடா தொடை மருத்துவக் குணங்கள்:

ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.
இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.
இதன் இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.
இதன் வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.
இதன் இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.
உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.
இதன் இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
இதன் வேரை 50 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு, 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாக கடைசி மாதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வர, சுகப் பிரசவம் ஆகும்.
இதன் இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.
இதன் இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.
இதன் இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.
இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.

அரைக்கீரையின் மருத்துவப் பயன்கள்:


இக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.
இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும்.
இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.
இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.
இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.
இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்