Monday, September 30, 2013

பாசிப்பயறு......

பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.
இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்: சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத்திறன் கூடும்: மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகுசாதனப் பொருள்: குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

கண் கருவளையம் போக்கும் அகத்தி!

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

ரத்தத்தை சுத்தமாக.........

முட்டைகோஸ் :veg
வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜுஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.
காலிஃப்ளவர் :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாகற்காய் :
கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.
வேப்பிலை :
வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு :
பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும்.
கேரட் :
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.
எலுமிச்சை :
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அன்னாசி :
பழங்களில் அன்னாசிப் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, ரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி டீ :
இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், ரத்தம் சுத்தமாக இருக்கும்.
பார்ஸ்லி :
சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி யையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் எந்தவித தங்கு தடையின்றி இயங்க செய்வதில் ரத்தத்தின் பங்கு முக்கியமானது. சீரான ரத்த உள்ள மனிதனுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள்.
அந்த வகையில் உடலுக்கு ஒவ்வாத உணவு பண்டங்களை தவிர்த்து மேற்கூறிய உணவு பொருட்களை உண்டு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பிறருக்கு தானமாக கொடுக்கும் ரத்தத்தையும் சுகாதாரமானதாக கொடுப்போம்

Sunday, September 29, 2013

உடல் எடை கூட........

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது .
2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும்
4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும்
5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும்
6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
7.  கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும்
8. முட்டையின்  மஞ்சள் கருவை  தினமும் சாப்பிட வேண்டும்
9. முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை  சாப்பிட வேண்டும்
10. நடனம், நடை பயிற்சி, நீச்சல்   செய்ய கூடாது
11. வருத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்
12. வேர்கடலை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்
13. வெண்ணை , நெய் போன்ற பால் பொருட்களை உணவுகளில் சேர்த்துகொள்ளவும்
14. சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தவேண்டும்
 15. கொழுப்பு இறைச்சியை சாப்பிட வேண்டும்
 16.உருளை கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்
 17.சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் .இது ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் .
        இவைகளை கடைபிடிப்பதின்  மூலம்  நான்கு வாரங்களில் உடல் எடை கூடும் .

Saturday, September 28, 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை!

காலையில் சிறுநீரை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள்.

1. எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.

2. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்.

3. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய்.

4. எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

5. எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது.

6. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்துவது கடினம்.

Friday, September 27, 2013

குழந்தைகளின் ஞாபக சக்தி

வல்லாரைக்கீரை    - 1 கைப்பிடி
ஆரைக்கீரை        - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
மிளகு        - 5
சின்ன வெங்காயம்    - 5
பூண்டுப்பல்        - 2

இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும்.  இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.

மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும்.  அசதி பறந்தோடிவிடும்

பசி அதிகரிக்க ...................

இஞ்சி, பசியை தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்.

தேள் கடி விஷம் நீங்க


1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

Thursday, September 26, 2013

முலிகை - கேழ்வரகு

கேழ் வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.
அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.
இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
எடை இழக்க:-
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.
அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது.
இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :-
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்த :-
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :-
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்த :
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
சோர்வைப் போக்க :-
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :-
உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
பிற ஆரோக்கிய நிலைமைகள் :-
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :-
கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.
இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது.
ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான்.
அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.
அதனால் ஏற்படும் மாற்றம்:-
எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.

Wednesday, September 25, 2013

முலிகை - பொன்னாங்கணி கீரை

மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கணி கீரை. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை. பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் கண்பார்வை மிக துல்லியமாக தெரியும்.
பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும். சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும். கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும். பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும். உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது. குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.

முலிகை - கீரைகள்

1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
2.
காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.
3.
சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.
4.
பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.
5.
கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
6.
மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.
7.
குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
8.
அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.
9.
புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.
10.
பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.
11.
பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.
12.
பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.
13.
சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.
14.
சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.
15.
வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.
16.
முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.
17.
வல்லாரை மூளைக்கு பலம் தரும்.
18.
முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.
19.
புண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.
20.
புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.
21.
நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.
22.
தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.
23.
கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.
24.
முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.
25.
பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
26.
புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
27.
மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
28.
மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.
29.
முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.
30.
சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.
31.
வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
32.
தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.
33.
தவசிக் கீரை இருமலை போக்கும்.
34.
சாணக் கீரை காயம் ஆற்றும்.
35.
வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.
36.
விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.
37.
கொடி காசினி பித்தம் தணிக்கும்.
38.
வேலைக் கீரை தலைவலியை போக்கும்.
39.
துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.
40.
துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
41.
கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
42.
மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.
43.
நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.
மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,
44.
அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.
45.
பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்

முலிகை - முருங்கை கீரை

சத்துப் பொருட்கள்உயிர்சத்துகள்
தாது உப்புகளும்
சுண்ணாம்பு சத்துகள்  இரும்பு சத்துக்கள்
வைட்டமின் சி
வைட்டமின்  ஏமுருங்கைக் கீரையின் பயன்கள்

 • இக்கீரையில்  வைட்டமின் சி மிகுந்திருப்பதால்  சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.
 • பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.
 • இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு  ஒளிஊட்டகூடியது.
 • தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
 • மலசிக்கலை தடுக்கிறது .
 • இக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .
 • முருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது .

பொதுவான பயன்கள்
 • இக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள்  சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும்  கொடுக்கும் .
 • முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .
 • முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி , கை கால் அசதியும் யாவும் நீங்கும் .
 • டைமன்ட்  கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் . நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும் .


 ஆண்களுக்கான பயன்கள்
 • முருங்கைக் கீரையை நெய்யில்  பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும் உண்டாகும் .
 • தாது விருத்தியும் உண்டாகும்
 • இதை உணவில் 40  நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும் .

பெண்களுக்கான  பயன்கள்
 • இதை தினமும்  உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம் .
 • இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும்  பயன்படுகிறது
 • பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன்  சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும் .
 • இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத  பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும் ,அடி வயிற்று வலியும் நீங்கும் .
மருத்துவ பயன்கள் 
 • இக்கீரையை விளக்குஎண்ணெய் விட்டு வதக்கி  இடுப்பு வலி ,வாத மூட்டு வலி  உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும். 
 • இலையையும் , மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தலைவலி நீங்கும் .
 • இலையை அரைத்து  வீக்கங்கலின்  மீது பூசினால் வீக்கம் தனியும் .
 • இக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன்  கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும் .
 • இலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து சில துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும் .
 • எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும் .

இரவில் முருங்கை கீரையை சமைத்து உண்ணக்கூடாது.
எந்த கீரையையாக இருந்தாலும் இரவில் உண்ணக்கூடாது .Tuesday, September 24, 2013

தூதுவளை


தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
 தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

 இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும்.

இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது. தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும்.

நுரையீரல் வலுவடையும். தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும். பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

 தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

 தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

 தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

 சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும். தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்

குடல் புழுவை - மல்லிகை!

ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம். சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

 புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

 இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

முலிகை - கடுக்காய்

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்… “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

Saturday, September 21, 2013

உடல் பருமனாக..

உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.

பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வை*த்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

Wednesday, September 11, 2013

முலிகை எண்ணெய் - முடி அடர்த்தியாக வளர.

தேவையான பொருட்கள்

அனைத்து கீரைகளும் ஒரே அளவு
1. பொடுகுதலை கீரை
2. கரிசலாங்கண்ணி கீரை
3. கருவேப்பிலை
4. மருதாணி இலை
5. செம்பருத்திப்பூ
6. செம்பருத்தி இலை
7. வேப்பந்தலை
8. பொன்னாங்கன்னி கீரை

9௦. வெந்தயம் - உள்ளங்கை அளவு
10. நெல்லிக்காய் - ஒரு கீரையின் அளவு (கொட்டை நீக்கி)
11. தேங்காய் எண்ணெய்

செய்முறை - ஒன்று

பொடுகுதலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, வெப்பந்த்தலை பொன்னாங்கன்னி கீரை இவற்றின் இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு நன்றாக அலசி, சம பங்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  செம்பருதிப்பூவையும் அதே பங்கு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, மேற்கண்ட கீரை மற்றும் பூவுடன் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் போட்டு நன்றாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.  வேண்டும் என்றால் மிஞ்சிய சக்கயுடன் சிறிது நீர் விட்டு மீண்டும் அரைத்து இனொரு முறை பிழியலாம்.

பிழிந்த சாருடன் அதே அளவு தேங்காய் எண்ணை சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.  முதலில் நீர் இருப்பதால் சடசடப்பு வரும்.  பின்பு கரும் பச்சை நிறமாக மாறும். கிட்டத்தட்ட அரைமணி நேரம் காய எண்ணையாக மாறும். உடன் வெந்தயம் சேர்த்து சிறிது நேரத்தில் அறுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.