Saturday, February 23, 2013

துளசியின் மருத்துவ பயன்பாடுகள்.

துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும். சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள்.

துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.

சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. கிருமி நாசினியாகவும், உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் அது செயல்படுகிறது.

சளி போன்றவற்றிற்கும் துளசி மருந்தாக அமையும். துளசிச் செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம். துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.

ரத்த அழுத்தம் குறைய.........
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய..........

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும். குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும். அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை    - 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல்    - 5 கிராம்
கீழாநெல்லி    - 10 கிராம்
ஓமம்    - 5 கிராம்
மிளகு    - 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக் கம்மல், வலி நீங்க.........

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும். 10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க............

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறுசிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க........

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

சுண்டக்காயின் மருத்துவ குணம்.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
 
சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து.
 
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
 
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.
 
இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
 
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்.

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்  இதோ:

* கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

* பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்

* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்.

தினமும் எட்டு முறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் அதிகமாகக் குடிப்பது கொழுப்பைக் கரைத்திட உதவும். மேலும் கோடை காலங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைத் தடுக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க வேண்டும்.
 
உடல் Dehydrate ஆவதை எடைக் குறைப்பு என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புரதச் சத்து நிறைந்த மீன் உணவுகளை நிறைய சாப்பிடலாம். இதில் உள்ள Omega 3 Fatty Acid உடல் எடை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதயத்திற்கும் இதமானது.
 
பச்சைக்காய்கறிகளை உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் நறுக்கி துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் உணவுக்கு முன் சிறிது சாப்பிடுங்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க உதவும்.
 
முட்டைக்கோஸ்,குடை மிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். எண்ணையில் பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் நார்ச் சத்து நிறைந்த முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி.

அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும்.

உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.


சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

மனித வாழ்க்கைக் காலத்தில் பிள்ளைப் பருவ முக்கியத்துவம்.

மனித வாழ்க்கைக்கால விருத்திப் பருவங்களில் பிள்ளைப்பருவம் மிக முக்கியமானது. இங்கு விருத்தி என்ற எண்ணக்கரு முன்னேற்றகரமான மாற்றங்களைக் குறித்து நிற்கின்றது.
எல்லா மாற்றங்களையும் விருத்தியாகக் கொள்ளவும் முடியாது. உளவியல் ரீதியாக விருத்தி பற்றி நோக்கும்போது; உடல், அறிவு, நடத்தை, ஆளுமை மாற்றங்கள் பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக நிகழ்கின்றமையை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

19 ஆம் நூற்றாண்டிலிருந்தே மனித நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான உளவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளை நடத்திய உளவியலாளர்களால் மனித இயல்புகள், பிள்ளையின் விருத்தி பற்றிய முழு விளக்கத்தையும் பெற முயலவில்லை.

நடத்தை பற்றிய சில நோக்குகளில் மட்டும் ஆர்வம் கொண்ட வெவ்வேறு பிரிவுகளை அவர்கள் அமைத்தார்கள். அவர்களுடைய ஆய்வு நோக்கங்கள், முறைகள் வெவ்வேறாக இருந்தன. மேலும் இவர்களது ஆய்வுகள், தரவுகள் மென்மேலும் அதிகரிக்கச் செய்தனவே ஒழிய தொடர்ச்சியான முறையில் விருத்தியின் வடிவங்களை வழங்குவதற்கு ஒன்றிணைக்கப்படவில்லை.

உதாரணமாக ஞாபகம் பற்றிய கட்டுப்படுத்திய பரிசோதனை ஆய்வு நுண்ணறிவைக் கணித்து அளவிடுவதற்கு தொடர்ப்படுத்தப்பட்டிருக்கலாம். அத்தோடு இந்த ஆய்வால் பிள்ளையின் ஞாபக சக்தி எப்படி மாறுகின்றது எனக் கூற முடியவில்லை.

எனினும் பல்வேறு உளவியல் விஞ்ஞான ஆய்வுகள் பிள்ளைப்பருவ விருத்திசார் முக்கியங்களை எடுத்தியம்புகின்றன. இவற்றினூடாக பிள்ளை விருத்தி பற்றிய விடயங்களை அறிய முடிகின்றது.

மனித வளர்ச்சிப் பருவங்களில் பிள்ளை பற்றிய ஆய்வுகளிலே குறுக்குவெட்டு ஆய்வுமுறை, நெடுங்கோட்டு அல்லது நெடுக்குவெட்டு ஆய்வுமுறைகள் ஆய்வின் நோக்கம் கருதி மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும் இங்கு நெடுங்கோட்டு ஆய்வே கூடுதலாகப் பிரயோகிக்கப்படுகின்றது.

நடைமுறை விருத்திசார் உளவியலிலே ஆர்னல்ட் கெசல் (18801961) முதிர்ச்சிப் பொறிமுறைக்கு  முக்கியத்துவம் கொடுத்து நெடுங்கோட்டு ஆய்வு மூலம் 15 வயது வரையான பிள்ளைகளின் இயல்புகளை ஆராய்ந்தார்.

சுய ஒழுங்குபடுத்தலினூடாக பிள்ளையிடம் உளவிருத்தி ஏற்படுவதைத் தனது ஆய்வு மூலம் உறுதிப்படுத்தினார். மனித விருத்திப் பருவங்களில் மிக முக்கியமான பிள்ளை பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளைச் செய்பவர்கள் இன்று நெடுங்கோட்டு ஆய்வு முறைகளையே பின்பற்றுகின்றனர்.

இதற்குக் குறைந்த அளவிலான மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உண்டு. ஏனெனில் பெருந்தொகையான மாதிரிகளைக் கொண்ட நீண்ட காலத்துக்கு ஆய்வுகளைச் செய்வது கடினமாகும். நெடுங்கோட்டு ஆய்வுகளின் முக்கிய நன்மை பிள்ளையின் வளர்ச்சிக் கோலம் எவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்கின்றது என்பதைக் கண்டறிய முடியும்.

அத்துடன் முன்னர் நிகழ்ந்ததையும், பின்னர் நிகழ்ந்ததையும் ஒப்பிட்டு நோக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் நடத்தைக்கும், விருத்திக்கு முள்ள தொடர்புகளை விளங்கிக் கொள்ள முடியும். நெடுங்கோட்டு ஆய்வுகள் செலவு மிக்கவை, நீண்ட காலம் கொண்டவை.

தனியார் ஒருவரால் இதனைச் செய்ய முடியாது. தற்போது இத்தகைய ஆய்வுகள் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த ஆய்வாளர் குழுக்களினாலேயே செய்யப்படுகின்றன.
இந் நெடுங்கோட்டு ஆய்வுகளின் அடுத்த பிரச்சினை நீண்ட காலப்பகுதிக்குப் பரிசோதனைக் குட்படுபவர்கள் ஆய்வு செய்யப்படும் போது பரீட்சை உணர்வைப் பெற்று அதன் வயப்பட நேரிடலாம்.

ஆய்வு முறைகளில் அவதானம்

பிள்ளை பற்றிய ஆய்வுகளுக்கும் பெற்றோர் வைத்திருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைக் குறிப்புகள், இயற்கையான ஆற்றல்கள், ஆர்வங்கள், சமூகவிருத்தி, விளையாட்டுக்கள், பழக்கவழக்கங்கள், பேச்சு, உடல் வளர்ச்சிகள் , மனவெழுச்சி நிலைகள் முக்கியமானவையாகவுள்ளன.

இவற்றின் மாற்றங்களை அவதானிப்பு முறையைப் பயன்படுத்தி முழுமையாக அறிய முடியும். பிள்ளை விருத்தி ஆய்வுகளில் இன்று அவதானம் ஓர் ஆய்வு முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த முறையை சிறப்பாகப் பயன்படுத்த நவீன கமராக்கள், சாதனங்கள், கணினிகள் தற்போது கையாளப்படுகின்றன.

பிள்ளை விருத்தி சார் உளவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட  நியமங்கள் மற்றும் உளவியல், உயிரியல், மானுடவியல், உடலியல், பிறப்புரிமையியல் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளையும் தம் முன் இணைத்துக் கொண்டனர்.

இந்த ஆய்வுகளின் பேறுகள் மூலம் பிள்ளைகளின் விருத்திக் கோலங்கள், நியமங்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கற்றல் தொடர்பான விடயங்கள் அவர்களது பிறழ்வுகளுக்கான காரணங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனை வழிகாட்டல் செயல்முறைகளை அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலமாக அவர்களை சிறந்த எதிர்காலப் பிரஜைகளாக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆய்வுகளினூடாக பிள்ளை விருத்தி பற்றிய கொள்கைகள் உருவாகியமை பற்றி இனிக் கவனிப்பது பொருத்தமாக இருக்கும்.

விருத்திசார் ஆய்வுகள்

ஏனைய விஞ்ஞானத்துறைகள் போன்று உளவியல் ரீதியான பிள்ளைகள் பற்றிய விஞ்ஞான ஆய்வுகளும் பிள்ளை விருத்திபற்றிய கொள்கைகள் எழக்காரணமாக அமைந்தன. ஒரு கொள்கை எதிர்கால ஆய்வுகளுக்குத் தேவையான கருதுகோள்களை  வழங்குகின்றது.

மேலும் உருவாக்கப்பட்ட கொள்கைகளைப் பரிசீலனை செய்ய உதவுகின்றது. பிள்ளை விருத்தி பற்றிய வினாக்கள் யார்? எது? ஏன்? எப்போது? என்ற முறையில் அமையும். சகல குழந்தை உளவியலாளர்களும் இவைபற்றிய ஒருமித்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

சில விடயங்களில் ஒத்த தன்மையையும் கட்டினார்கள். இந்த வகையில்; உயிரியல் கொள்கைகள், சூழல்சார் அல்லது கற்றல் கொள்கைகள் உயிரியல் சூழல் இடைத்தாக்கக் கொள்கைகள் உளபகுப்பாய்வுக் கொள்கைகள் முக்கியமானவையாகவுள்ளன.

பிள்ளையின் விருத்தியில்  பரம்பரை, சூழல், முதிர்ச்சி, கற்றல் என்பன செல்வாக்குச் செலுத்துவதை இந்தக் கொள்கைகள் எடுத்தியம்புகின்றன. விருத்திசார் உளவியலில் மையப் பொருளாக அமைவது வளப்ர்பை விட இயற்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

அதற்கு அடுத்தபடியாகவே வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பபடுகின்றது. பரம்பரையின் செல்வாக்கும் உயிரியல் கொள்கையில் காணப்படுகின்றது. உயிரியல் ரீதியாக பிள்ளை விருத்தியை அர்னல்ட் கெசல் முழுமையான ஆய்வு ரீதியான உயிரியல் கொள்கையை வெளியிட்டார்.

சூழல்சார் கல்விக் கொள்கை

சூழல் சார் அல்லது கற்றல் கொள்கைகள் பிள்ளை விருத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கருத்தரிப்பு தொடக்கம் குழந்தை பிறந்து வளர்ந்து மரணிக்கும் வரையில் உயிர் இனங்களின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்தும் பௌதிக, சமூக, உள உவகங்களின் ஒட்டு மொத்தமே சூழல் ஆகும்.

அமெரிக்க உளவியலாளர் ஜே.பி.வேட்சன் சூழல்சார் பிள்ளை விருத்தி செல்வாக்கை  எடுத்தியம்புகின்றார். பிரித்தானிய தத்துவஞானி ஜோன் வொக் கூறிய பிள்ளை தனது வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது அது ஒரு வெற்றுத்தாளாகவே இருக்கிறது.

சூழல் அனுபவங்களே அதனது விருத்தியில் முழுச் செல்வாக்கும் பெறுகின்றது என்ற கருத்தை வாட்சனும் ஏற்றுக் கொண்டார். டி.வாமா என்ற பிரான்ஸ் சூழலியல் உளவியலாளர் கருத்துப்படி புதிய உள, உடலியல் பண்புகள் சூழலின் செல்வாக்கினாலேயே பெறப்படுகின்றன.

இவை பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறையினருக்கும் கையளிக்கப்படுகின்றது என்றார். இதனை மானுடவியலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காரல் உளவிய கொள்கைகள் எல்லாமே சூழலின் செல்வாக்கை  இயம்பி நிற்கின்றன.

உயிரியல் சூழல் இடைத்தாக்க கொள்கை


உயிரியல் சூழல் இடைத்தாக்கக் கொள்கை பிள்ளை விருத்தியில் முக்கியம் பெறுகின்றது. தனியாளர் விருத்தியில் உயிரியல் அல்லது அக விருத்திக் காரணிகளும் சூழல் காரணிகளும் வகிக்கும் பங்கு முதன்மை பெறுகின்றன.

பிள்ளை புற உலகுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபடுவதை உயிரியல் காரணிகள் சாத்தியமாகின்றன. பியாஜே இக் கொள்கையைப் பயன்படுத்தி அறிவுசார்  விருத்தியையும், ஒழுக்க விருத்தியையும் விளக்கினார். உயிரி சில அமைப்பு ரீதியான தன்மையைக் கொண்டது. இவ்வாறே சூழலும் உள்ளது என்பது பியாஜேயின் எடுகோளாகும்.

தனியாள் நடத்தையைத் தீர்மானிக்கும் சில அடிப்படையான உள அல்லது ஒழுக்க ரீதியான அமைப்புக்களுக்கும் இவ் இடைத்தாக்கம் இட்டுச் செல்கிறது என பியாஜே எடுத்துக் காட்டினார்.

இவரது முக்கிய இடைத்தாக்க எண்ணக்கருக்களாக திறனமைப்பு, தழுவல், ஒழுங்கமைப்பு தன்மயமாக்கல், தன்னமைவாக்கல் என்பன முக்கியம் பெறுகின்றனர். மேற்கூறப்பட்ட மூன்று கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக சிக்மன் பிராய்டின்  உளப்பகுப்பாய்வுக் கொள்கை உள்ளது.

பிராய்டினுடைய கொள்கை பிள்ளை விருத்தி பற்றிய ஆய்வில், பிள்ளைப் பருவ அனுபவங்கள் அதன் பிள்ளையை விருத்தியிலும் விருத்திசாரா போக்கிலும்  கொண்டிருந்த தாக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

இது விருத்திசார் உளவியலில் ஒரு திருப்பு முனையாக அமைகின்றது. எனினும் உளப் பகுப்பாய்வு உளவியலுக்கும், பரிசோதனை உளவியலுக்குமிடையே பிணைப்பை ஏற்படுத்துவது சாத்தியமாகவில்லை. இவை தனித்தனியாகவே  உள்ளன.

பிராய்டின் கொள்கை தனியாள் ஒருவருடைய எழுச்சி சார்பான நடத்தை சார்பான நெறி பிறழ்வுகளை இனம் காண்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டது. விஞ்ஞானபூர்வமானது எனவும் விமர்சிக்கப்படுகிறது.

தற்போது இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உளநோய் மருத்துவர்களால் மருத்துவ உளவியலில் இக் கொள்கை சிகிச்சையளிக்கப் பிரயோகிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கொள்கையும் எந்த அம்சங்களை வலியுறுத்துகின்றன என்பதிலேயே வேறுபாடுகள் உண்டு.

ஒரு கொள்கைவாதி உருவாக்கிய கருதுகோள்களை ஏனையோர் வெவ்வெறு முறைகளில் பரீட்சித்து ஒரே நேரத்தில் பல ஆய்வுகளை நடத்தி கொள்கைகளை  அறிவியல் ரீதியாக இணைத்துப் பார்க்கமுடியும். ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு கொள்கை சரியானது என்றோ மாறாக கொள்கை பிழையானது என்றோ கூறுவதற்கில்லை. ஒவ்வொரு கொள்கைகளிலும் வலுவான அம்சங்கள் உண்டு. மேலும் பல புதிய விடயங்களும் இவை தொடர்பான ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஓர் அனுபவம் மிக்க ஆசிரியர் அல்லது வழிகாட்டிகள் இக் கொள்கைகளை இணைத்துக் கொள்ளுமிடத்துப் பிள்ளைகளை விளங்கிக் கொள்ளவும், அவர்களுக்குக் கற்பிக்கவும் வழிகாட்டவும் பெற்றோருக்கு ஆலோசனை கூறவும் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து நிலைகளில் பணிபுரிய முடியும். பல்வேறு கொள்கைகள் இருப்பதனால் அவை ஒன்றை ஒன்று முழுமைப்படுத்தவும் உதவுகின்றன.

கூந்தல் உதிர்வதை தடுக்கும் வழிகள்!

இன்றைய காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் அதற்கு ஒரே வழி இயற்கை முறையை கடைபிடிப்பது தான்.

இயற்கை பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

*  எண்ணெய் குளியல் ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.

*   தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.

* வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கரும்புள்ளிகளை நீக்கும் எலுமிச்சை!

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
எலுமிச்சை ஸ்கரப்
இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.
எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப்
கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு
இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்!

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

Thursday, February 21, 2013

காலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை குறையும்அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .

Wednesday, February 6, 2013

பாகற்காய் பயன்பாடுகள்

பாகற்காய் பயன்பாடுகள்

1. அது வேலை மற்றும் ஒழுங்காக அனைத்து சுரப்பு சுரக்க கணையம் தூண்டுகிறது.
2. அது இன்சுலின் மூலம் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் உதவி போன்ற ஒரு நடவடிக்கை உண்டு என நீரிழிவு நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
3. பாகற்காய் பித்த சாறுகளின் சரியான சுரத்தலுக்கான கல்லீரல் தூண்டுவது உதவுகிறது.
4. இது செரிமான நொதி சுரத்தல் ஊக்குவிக்கிறது என உணவு எளிதாக செரிமானம் உதவுகிறது.
5. இது உணவு நல்ல செரிக்கச்செய்வதில் உதவுகிறது.
6. அது ஒரு பசி தூண்டும் உணவு ஆகும்.
7. இது இரைப்பை குடல் பாதையில் உள்ள புழுக்கள் அழித்து உதவுகிறது.
8. இது இரத்த சுத்திகரிப்பு உதவுகிறது மற்றும் நுண்ணுயிரி மற்றும் அங்கு இருப்பு விவரங்களை என்று நச்சுகள் இருந்து தொற்று இருந்து எங்களுக்கு உதவும்.
9. இது மிகவும் பொதுவாக, குறிப்பாக அது முகத்தில் முகப்பரு மற்றும் கருப்பு புள்ளிகள் பயன்பாட்டு காண்கிறார் தோல் நோய்கள் பயன்படுத்தப்படுகிறது.
10. கசப்பான முலாம்பழம் ஒரு அழற்சியை முகவர் இதனால் உடலில் வீக்கம் தற்போது எந்த விதமான அடக்கினான் உள்ள உதவி பணிபுரிகிறார்.
11. அது சளி நீக்க பண்புகள் மற்றும் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் திரட்டப்பட்ட சளி விடுதலை உதவுகிறது என பரவலாக நாள்பட்ட இருமல் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்த்துமா நோயாளிகள் இதை தொடர்ந்து எடுத்து ஒரு நல்ல நிவாரணம் இருக்கிறது என்று கருதப்படுகிறது.

விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!

வைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில் இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது போன்றவை தடுக்கப்படும். குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள், இந்த வைட்டமின் ஈ நிறைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்தி தடுக்க முடியும். இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
1. பசலைக் கீரை
பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
2. ஆலிவ் ஊறுகாய்
ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் வைட்டமின் ஈ உள்ளது. எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.
3. உலர் மூலிகைகள்
மூலிகைகளில் நிறைய வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே சாலட், சூப் போன்றவை சாப்பிடும் போது அதில் சுவையை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கிமாக வைத்துக் கொள்ளவும், உலர் மூலிகைகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
4. வேர்க்கடலை
ஸ்நாக்ஸில் சிறந்ததாக இருக்கும் வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்.
5. பாதாம்
நட்ஸில் ஒன்றான பாதாமும் சிறந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டால், அதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.
6. கடுகுக் கீரை
கடுகுக் கீரையில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால், இதில் உள்ள முழு நன்மைகளையும் பெறலாம்.
7. ப்ராக்கோலி
சூப்பர் உணவுகளில் ஒன்றான ப்ராக்கோலியில் வைட்டமின்களான ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனையும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நல்லது.
8. சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் ஈ, சி மற்றும் மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.
9. பிஸ்தா
நட்ஸ் சாப்பிட ரொம் பிடிக்குமா? அப்படியெனில் மறக்காமல் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுங்கள். அதிலும் உப்பில்லாத வறுத்த பிஸ்தாவை சாப்பிடுவது சிறந்தது.
10. மிளகாய் தூள்
மசாலா பொருட்களில் ஒன்றான மிளகாய் தூளை உணவில் சேர்த்தால், காரம் மட்டுமின்றி உணவுக்கு ஒரு நல்ல சுவையும் கிடைக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தால், வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உடலுக்கு கிடைக்கும்.