வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்

புதன், 7 செப்டம்பர், 2016

மூலிகை பயன்கள் - விஷ்ணு கிராந்தி.



இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக்  குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரண்என் மருத்துவக்  குணங்களும் ஒன்றுதான்.
“திறந்திட்ட விஷ்ணு  சுரந்த தனைக்கொணர்ந்து
செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரம்தான் போகும்
கறந்திட்ட தேகமது கருத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரந்தான் காணும்
பிறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகி ஏறும்
ஏற்றாமாம் சுழிமுனையும் திறந்து போமே. . . . .
என்கிறார், சித்தர் போகர்.
விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசம் சீராக்கும் என்பது தான் இந்தப் பாடலின் சுருக்கமான பொருள்.
காய்ச்சல் காணாமல் போகும்!
அந்தக்காலத்தில் கொடும் காய்ச்சலைக் குணப்படுத்த விஷ்ணுகிராந்தி                                                                                                              அதிகம்  பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். சித்த மருத்துவ நூல்கள் . மனிதனை தாக்கும் காய்ச்சல் 64 வகையானவை எனக் குறிப்பிடும் சித்தர்கள் வாதம் பித்தம், கபம் (சளி) என்ற மூன்று நாடிகள்தான் காய்ச்சலுக்கு அடிபடையானவை என்கிறார்கள். குறிப்பாக, விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் பயன்பத்தி இருக்கிறார்கள். விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி  ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும் போது மூன்று வேளை குடித்தால், 5 நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். பக்கவிளைவு எதுவும் கிடையாது என்கிறது, சித்தமருத்துவம்.
விஷக்காய்ச்சல் விரட்டும் விஷ்ணுகிராந்தி கஷயாம்!
கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு,  ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு    முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது  சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி  குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும் என்கிறார்கள், தென்னிந்திய சித்தமருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி

மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும். கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியைத் தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றைப் போட புகை எழும். இந்தப் புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல் வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.