செவ்வாய், 28 அக்டோபர், 2014

பேரிக்காய்பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.  இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு:

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

* உடல் சூட்டைத் தணிக்கும்.
* கண்கள் ஒளிபெறும்.

* நரம்புகள் புத்துணர்வடையும்.

* தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

* குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.திங்கள், 27 அக்டோபர், 2014

வயிறு மற்றும் உடல் எடை குறைய வழிமுறைகள்

1.இருதயத்தை வேகமாக இயங்க செய்யும் பயிற்சி
2. அதிகாலையில் மூச்சு பயிற்சி
3.திட்டமிட்ட சரிவிகித உணவு
4.நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. சர்க்கரையை தவிர்க்க வேண்டும்
6. ஒரு நாளைக்கு குறைந்த  அளவிலான சாப்பாடு 6 அல்லது 7  முறை   சாப்பிட வேண்டும்
7. கூட்டு  கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்
8. நல்ல கொழுப்புகள் இருக்கும்  உணவை சாப்பிட வேண்டும்
9. புரோட்டீன் நிறைந்த  காய்கறிகள்  மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்
10. சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
11. நார்சத்து அதிகம் உள்ள பழங்களை  சாப்பிட வேண்டும்
12. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்
13. உடல்பயிற்சி  செய்ய வேண்டும்
14. வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது
15. நாளைக்கு ஒரு முறையாவது  கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.
16. அதிகாலையில் சுடு தண்ணீரும், பகலில் குளிர்ந்த தண்ணீரும் குடிக்க வேண்டும்
17. உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
18. தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது

சனி, 11 அக்டோபர், 2014

ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் . . .

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..

அனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால் முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட பல நலன்களைகொண்டிருக்கிது யூக்கலிப்டஸ் எண்ணெய்.

யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் மாற்று மற்றும் சிகிச்சைமுறை காரணமாக பெரும்பாலும் முதலுதவி மருந்தாகப் பயன்படுகிறது. இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் எரிச்சல், பூச்சி கடி, தசை வலி நிவாரணத்துக்கு உதவுகிறது.

சுவாச பிரச்சனைகள்


இன்றைய சூழலில் பலர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுகின்றனர். ஆஸ்துமா, மார்பு சளி அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூக்கலிப்டஸ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சூடான நீரில் கொஞ்சம் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து பருகினால் இரத்தசோகை, எதிர்ப்பு அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

தசை வலி நிவாரணம்

தசை வலியால் அவதி படுபவர்களுக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உதவுகிறது.. நீங்கள் வெறுமனே பாதிக்கப்பட்ட பகுதியில் அதாவது தசைகளில் வலி ஏற்படும் இடங்களில் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை போட்டு மஸாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். கடினமான தசைபுண், சுளுக்கு, தசைநார், நரம்புகளில் வலி போன்ற தீவிர பிரச்சனைகள் அனைத்திற்கும் யூக்கலிப்டஸ் ஆயிலை தேய்த்து மஜாஸ் செய்தால் தசை வலியிலிருந்து குணம் பெறலாம்.

காய்ச்சல்

காய்ச்சல் என்றால் உடல் அதிக வெப்பமுடன் இருக்கும். யூக்கலிப்டஸ் எண்ணெய் உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்க்கு பொதுவாக காய்ச்சல் எண்ணெய் என்ற பெயரும் உள்ளது.

குடல் புழுக்கள்


யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு புழுக்கொல்லி மற்றும் குடல் கிருமிகள் நீக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு உள்ளவர்கள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உட்கொண்டால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும். யூக்கலிப்டஸ் எண்ணெய் அடிக்கடி தோல் நோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தப்படுத்தலாம்.