தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --
![]() |
தைராய்டு நோய்கள்
வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த
நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா
சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது.
பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை
அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட
இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக
அவசியமாகிறது.
தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
|
தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
|
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
|
உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)
|
உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
|
அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்
|
குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
|
அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு
|
அதிகமான உடல் சோர்வு, களைப்பு
|
கை, கால், நடுக்கம், பதட்டம்
|
முறையற்ற மாதவிலக்கு
|
மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு
|
குறைவான வியர்வை
|
மிக அதிகமான வியர்வை
|
அதிமான தூக்கம், சோர்வு
|
தூக்கமின்மை
|
மலச்சிக்கல்
|
அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை
|
மன அழுத்தம்
|
பய உணர்வு, கோப உணர்ச்சி
|
அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி
|
அதிகமாக முடி கொட்டுதல்
|
அதிகமான குளிர் உணர்தல்
|
அதிகமான உஷ்ணம் உணர்தல்
|
அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
|
உடல் சதை பலஹீனம்
|
நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்
| |
இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்
|
இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்
|
மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல், ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக்
கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும்.
குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.
தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்
ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், வர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.
தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத
ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை
குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய
அவசியம் இல்லை.
தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும்
good job
பதிலளிநீக்கு