திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விளக்கெண்ணெய் மருத்துவம்

விளக்கெண்ணெய்  5 முதல் 10மி.லி வரை குடிப்பதால் வயிறு கழியச் செய்து சுத்தமாகும்.
1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.
2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும்.
3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும்.
4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும்.
5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும்.
6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியின்மை மற்றும் வயிற்று வலி இவை குணமாவதோடு சீதள மிகுதியால் ஏற்பட்ட கோழைக்கட்டு, இரைப்பு மற்றும் இருமல் இவைகள் இல்லாமற் போகும்.
7. ஆமணக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் வலியுண்டாகச் செய்கின்ற கீல்வாயுகளுக்கும் மற்றும் வீக்கங்களுக்கும் ஒத்தடம் தர வீக்கமும் வலியும் தணிந்து போகும்.
8. ஆமணக்கு இலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு குடிக்கச் செய்து ஆமணக்கு இலைத் தீநீர் செய்து ஒற்றடம் தருவதாலோ அல்லது இலையை வதக்கி மார்பகங்களின் மேல் கட்டி வருவதாலோ பிள்ளை பெற்ற பெண்மணிகளுக்கு பால் நன்றாக சுரக்கும்.
10. சிற்றாமணக்கு இலையோடு சம அளவு கீழ்க்காய் நெல்லி சேர்த்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு சில நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். இப்படிப் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆமணக்கு நமக்கு சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும் தாவரமாகும். எண்ணெயும் எளிதில் கடைகளில் கிடைக்க கூடியதாகும். இதன் அருமை தெரிந்து மனதில் பதிந்து பயன் பெற வேண்டும்.
11. ஆமணக்கு எண்ணெயை ஒரு துணியில் நனைத்து மூட்டு வீக்கம் வலி கண்ட இடத்தின் மேற் சுற்றி அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை சுற்றி அதற்கும் மேலாக சுடு தண்ணீர் நிரப்பிய பாட்டிலால் ஒற்றடமிட மூட்டுவலி மற்றும் வீக்கம் ஆகியன குணமாகும்.

Buy this product here: https://amzn.to/3k96NoS

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்...


* உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது உடலில் உள்ள சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு உஷ்ணமான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
* எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும். உடல் பொலிவை அதிகரிக்கும். சருமம் மிருதுவாக இருப்பதற்கும் மிளிர்வதற்கும் உடலில் எண்ணெய் தேய்ப்பது உதவும்.
* நம்முடைய பாதமும் கண்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
* தொப்புள் நம் உடலின் முக்கியமான ஒரு புள்ளி. யூக்கலிப்டஸ் எண்ணெய், சாண்டல்வுட் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொப்புளை மசாஜ் செய்தால் நல்ல உணர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது தொப்புளில் எண்ணெய்விடுவதாலும் இந்தப் பலன் கிடைக்கும். தொப்புளில் தேங்காய் எண்ணெயைவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வோம்.
* குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் வரக்கூடிய தழும்புகளை மறையச் செய்ய ஆமணக்கு எண்ணெய் உபயோகமாக இருக்கும். பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
* நம் உடலில் அதிகம் உழைப்பைத் தரும் உறுப்புகள் கைகளும் கால்களும்தான். எண்ணெய் தேய்க்கும்போது, கட்டைவிரலில் எண்ணெய் வைப்பது அதன் வலிகளையெல்லாம் போக்கும். மேலும், மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதி பெறும்.
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

எலும்பின் வலிமையை அதிகரிக்க.....

எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.
அதிகாலை சூரிய உதயம்
சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள்.
பூண்டு மற்றும் வெங்காயம்
உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.
அதிகப்படியான புரதம் வேண்டாம்
இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.
அளவான டீ, காபி
சிலர் ஓர் நாளுக்கு பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது, எலும்பின் வலிமைக்கு நல்லதல்ல. எனவே, இவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இதற்கு மாற்றாக பால் குடிக்கலாம்.
உடற்பயிற்சி அவசியம்
எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், சிட்-அப்ஸ் அல்லது உங்கள் மாடி படிகளை அரை மணிநேரம் ஏறி, இறங்கினால் கூட போதும்.
உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்
ஃபுட் பால், பாஸ்கெட்பால், பேட்-மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுங்கள். இது, தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.
சோடா மற்றும் கோலா பானங்கள்
சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் பல்லை போட்டால் கரைந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது.
பால் உணவுகள் அவசியம்
பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.
ஆரோக்கியமான உணவு
உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.
புகை, மது
காலம், காலமாக நாம் கூறுவது தான். புகை மற்றும் மதுவை விட்டொழித்துவிடுங்கள். குறைந்த பட்சம், முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.