சனி, 29 மார்ச், 2014

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தும்


தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.


ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்.

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம்.
பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்:
ஓடியாடி அலையும் உடலுக்கு சத்தான உணவுகள் அவசியம். அந்த உணவுகளில் இயற்கையாகவே எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன. உடலின் வளர்ச்சிக்கும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் அவசியம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது உணவியல் வல்லுநர்கள் கூறிய அறிவுரையை தெரிந்து கொள்வோம்.

கண்பார்வை தரும் 'ஏ'
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இதய பாதிப்பை நீக்கும் 'பி'
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி' குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

மன அமைதி தரும் 'சி'
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.
வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

எலும்புகளுக்கு பலம் தரும் 'டி'
வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

மலட்டு தன்மையை நீக்கும்
கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும்.

வெள்ளி, 28 மார்ச், 2014

பப்பாளி


 

 கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் :சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
பப்பாளியின் மருத்துவ குணங்கள் . . .

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.


* பித்தத்தைப் போக்கும்.
* உடலுக்குத் தென்பூட்டும்.

* இதயத்திற்கு நல்லது.

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

* கல்லீரலுக்கும் ஏற்றது.

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது
சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

*பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு



அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக் கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது.


ெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.

1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.

2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.

இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.

தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.

ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்: சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம்.

ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.

பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

புராக்கோலி


புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான
ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

சூப்பர் புராக்கோலி

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன..

நல்லெண்ணெய்

 


இந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த

 எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய
் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துவது இந்த எண்ணெய்தான். சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையுங் கொண்ட எண்ணெய் இது. எளிதாக சருமத்திற்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.



சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.

சீனா, இந்தியா, துருக்கி முதலான நாடுகளில் எள் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இளவேனில் காலத்தில் பயிரிடப்பட்டு மூன்று நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. எள்ளுச் செடி 30 செ.மீ. முதல் 90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் முட்டை வடிவிலோ, ஈட்டி வடிவிலோ 8 முதல் 13 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்திலிருக்கும். இந்தப் பூ கண் சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இதன் விதைகள் மிகச் சிறியது. இதில் 70 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.

ஒன்றிரண்டு பச்சை இலையை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசினால் பச்சை இறங்கும். இது புண்பட்ட கண்களைக் கழுவ உதவும்.

ஒன்றிரண்டு இலைகளை ஒரு ஆழாக்கு குளிர்ந்த நீரிலிட்டு ஊற வைத்து, தினம் இருவேளையாக ஆறு அல்லது ஏழு நாட்கள் கொடுத்துவர சீதக்கழிச்சல் குணமாகும். இலையைப் பதவடையாகச் செய்து கட்டிகளுக்குக் கட்ட அவை சீக்கிரம் பக்குவமடைந்து உடையும். இதன் பூவைக் கண்ணோய்க்கு வழங்குவதுண்டு. காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கி, புண்களுக்குத் தூவ அவை குணமாகும்.

விதையை ஊறவைத்த தண்ணீரை உதிரச் சிக்கலுக்குக் கொடுக்கலாம். விதையின் விழுது ஒரு சுண்டையளவு வெண்ணெயில் சாப்பிட குருதி மூலம் குணமாகும்.

எள்ளைச் சேர்த்துப் பக்குவப்படுத்திய அன்னத்தை உட்கொண்டால் உடல் வன்மை உண்டாகும்.

எள் நெய் புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவைகளைத் தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.

எண்ணெயில் இரண்டு அல்லது நான்கு கரண்டியளவு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குக் கொடுத்துக் கொண்டுவர உடல் பூரிக்கும்.

கோழி முட்டை வெண்கருவுடன், எண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசிக்கொண்டு வர கட்டிகளின் வலி நீங்கும்.

இதையே காலையில் இரு கண்களிலும் விட்டுக் கட்டி, தலையிலும் தடவித் தேய்த்து, காய்ந்தறிய வெந்நீரில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் தலை முழுகிவர கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், இவைகளுடன் சேர்ந்த மண்டைக் குத்தல் முதலியன நீங்கும்.

இந்த எண்ணெய் மார்க்ரைன், சோப்பு மற்றும் ஒப்பனை பொருள்கள் முதலியன செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.


ஆகாயத்தாமரையின் மருத்துவ பயன்கள்



நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகள
ே மருத்துவப் பயனுடையவை. வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.


1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

மூலிகை : கருந் துளசி

 


நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் சளித் தொல்லையில் இருந்து தப்பிக்க கருந் துளசி

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்த...ுகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி பல்கி, பெருகி வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. “ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி பிடிக்க சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில் இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

மூலிகை :கஸ்தூரி மஞ்சள்

 


தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராது.

வியாழன், 27 மார்ச், 2014

அரிசி வகைகளும் அதன் குணங்களும்

நமது நாட்டில் முக்கிய உணவாக அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் குணங்களையும் பார்ப்போம். 

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும். 

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும். 

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும். 

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும். 

செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும். 

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். 

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும். 

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும். 

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான். 

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். 

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்.

புதன், 26 மார்ச், 2014

பசியைத் தூண்டும் இலவங்க மூலிகை

 
இலவங்கம் (கிராம்பு) அன்றாடம் சமையலுக்குப் பயன்படுவது. இது சமையலுக்கு சுவை ஊட்டுவதோடு மணமும் தருகிறது. இந்த செடியின் மலராத மொட்டுக்களைப் பறித்து உலர்த்தினால் வருவதே கிராம்பு என்ற இலவங்கம். இலவங்கத்திற்கு வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி பசியைத் தூண்டக்கூடிய சக்தி அதிகம் உண்டு.

குழந்தை வயிற்று கிருமியை அழிக்கும் திப்பிலி

திப்பிலியையும், திப்பிலி மூலத்தையும் நன்கு பொடி செய்து குறிப்பிட்டளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மறைந்து போகும். திப்பிலி மூலம், சுக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கடுகு எண்ணையுடன் கலந்து காய்ச்சி தடவினால் இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்துடன் திப்பிலி, சுக்கு, மிளகு திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய் விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு பொடி செய்துகொண்டு அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.

மூலிகை மருத்துவம்



அகத்தி 
 வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம்
 பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி 
 அரிப்பு, கண் நோய், கிருமி

அருகம்புல் 
 கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

ஆடாதோடை 
 இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

ஆவாரை 
 நீரிழிவு, ரத்த பித்தம் 

இஞ்சி 
 அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

எலுமிச்சை 
 பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

ஓமம் 
 கண்நோய், கபம், விக்கல்

கடுக்காய் 
 இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

கண்டங்கத்திரி 
 இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

கரிசலாங்கண்ணி 
 பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

கருவேப்பிலை 
 இரத்த பித்தம்

கருவேலம் 
 பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

கீழாநெல்லி 
 காமாலை, பித்தம், இருமல்

குங்குலியம் 
 பாண்டு நோய், காதுவலி

கொடிவேலி 
 கிரஹணி, வீக்கம்

கொத்தமல்லி 
 காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

சதகுப்பை 
 இருமல், யோனி நோய்கள் 

சீரகம் 
 வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

தும்பை 
 நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல்
நாவறட்சி, இரத்த தோஷம்.

திப்பிலி 
 இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

தும்பை 
 கபம், அஜீரணம், வீக்கம்

நன்னாரி 
 ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

நாயுருவி 
 கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

நாவல் 
 பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை
 கபம், பித்தம், நீரழிவு

பூசணி 
 புத்தம், ரத்த தோஷம், மனநோய்

பூண்டு 
 இதய நோய், இருமல்

பூவரசு 
 நஞ்சு, நீரழிவு, விரணம்

பெருங்காயம் 
 வயிற்றுவலி, உப்புசம்

பேரீச்சை 
 கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல்,   
 நாவறட்சி

மணத்தக்காளி 
 இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு 
 வயிற்று உப்புசம், பல்வலி

முள்ளங்கி 
 காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு 
தொண்டை நோய்கள்

வசம்பு 
 மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

வல்லாரை 
 சோகை, நீரழிவு, வீக்கம்

வாகை 
 வீக்கம், அக்கி, இருமல்

வால்மிளகு 
 வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

வில்வம் 
 வாதம், கபம்

விளாமிச்சம் வேர் 
 நாவறட்சி, எரிச்சல்

வெற்றிலை 
 கபம், வாய்நாற்றம், சோர்வு 

ஜாதிக்காய் 
 சுவையின்மை, இருமல்