Tuesday, March 24, 2015

சுக்கு - மருத்துவக் குணங்கள்சுக்குடன் சிறிது பால் சேர்த்துமைய்யாக அரைத்துநன்கு சூடாக்கிஇளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும்வலியுள்ள கை,கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

சுக்கைத் தூள் செய்துஎலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சுக்குமிளகுதனியாதிப்பிலிசித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவரகடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
சிறிது சுக்குடன்ஒரு வெற்றிலையை மென்று தின்றால்வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்குவேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவரஆரம்பநிலை வாதம் குணமாகும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்துவிழுதாக அரைத்துநெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

சுக்குகருப்பட்டிமிளகு சேர்த்து, ''சுக்கு நீர்'' காய்ச்சிக் குடித்து வர உடல் அசதிசோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன்தனியா வைத்து சிறிது நீர் தெளித்துமைய்யாக அரைத்து உண்டால்அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கிதேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.

சுக்குமிளகுசீரகம்பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலைமாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

சுக்குடன்சிறிது துளசி இலையை மென்று தின்றால்தொடர் வாந்திகுமட்டல் நிற்கும்.

சுக்குடன்மிளகுசுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவரதொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன்சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

சுக்குடன்கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
சுக்குஐந்து மிளகுஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்றுஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள்பூரான் கடி விஷம் முறியும்.

சுக்குஅதிமதுரம் இரண்டையும் தூள் செய்துதேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

தயிர்சாதத்துடன்சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால்வயிற்றுப்புண் ஆறும்.
சுக்குமிளகுபூண்டுவேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்துதினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
சுக்குமிளகுசீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சிதலைக்குத் தேய்த்துக் குளித்துவர,நீர்க்கோவை நீங்கும். ஈர்பேன் ஒழியும்.

சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவரபல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
கிராம்பின் மருத்துவ குணம்
கிராம்பு மருத்துவம் க்கான பட முடிவு


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Saturday, March 14, 2015

எளிதாக மூன்று நாட்களில் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?


 
lungs

 
சிலர் தங்கள் வாழ்க்கையில் புகை பிடிக்காது இருந்திருந்தாலும் நுரையீரல் பிரச்சனை இருக்கலாம். அதே சமயம், 45 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை இல்லாது ஆரோக்கியமாக இருக்கலாம். இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும .
எவ்வாறு இருப்பினும், மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி என்று பாரப்போம்.
• இதை செய்வதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எந்த விதமான பால் பொருட்களையும் சாப்பிடாமல் அறவே ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பாலினால் உண்டாகும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
• இதற்கு முதல்நாள் சுக்குமல்லி தேநீர் போன்ற எதாவது மூலிகை டீயைக் குடிக்கலாம். இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நுரையீரலுக்கு உடலில் உள்ள மற்ற உறுப்புகள் கூடுதல் வேலை தராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
• இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து காலை உணவுக்கு முன் குடிக்கவும்.
• பின்பு சில மணி நேரங்களுக்கு பிறகு 300 மில்லி கிரேப்பூரூட் பழத்தின் சாறு குடிக்கவும். கிரேப்பூரூட் கிடைக்காவிட்டாலோ அல்லது சுவை பிடிக்காவிட்டாலோ 300 மில்லி அன்னாசி பழத்தின் சாற்றை குடிக்கவும். ஏனென்றால் இந்த சாறுகளில் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நமது சுவாச உறுப்புகளை மேம்படுத்துகிறது.
• இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து மதிய உணவுக்கு முன்பு 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை குடிக்கவும். இந்த சாறு உங்கள் இரத்தத்தை இந்த மூன்று நாட்களுக்கு ஆல்களைஸ் செய்கின்றது.
• மதிய உணவுக்கு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த சாற்றைக் குடிக்கவும். பொட்டாசியம் ஒரு சிறந்த டானிக்காக மாறி இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகின்றது.
• படுக்கபோகும் முன்பு 400 மில்லி கிரேன்பரி சாறு குடிக்கவும். இந்த சாறு நுரையீரலிலுள்ள நோய்களை உண்டாக்கும் பாக்ட்டீரியாக்களை வெளியேற்றுகின்றது.
• உங்கள் உடலை நன்றாக கவனித்துக்கொள்ளவும். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• தினமும் 20 நிமிடங்கள் சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் குளிக்கும்போது சூட்டினால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேறுகின்றது.
• இரவு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் 5-10 துளிகள் யூகாலிப்ட்டஸ் ஆயிலை சேரத்து தலையை சுத்தமான துணியினால் மூடி ஆவிபிடிக்கவும்.
இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யவும்.


சுவாசத் பயிற்சி


சுவாசத் பயிற்சி
அனைவரும் கட்டாயம் செய்ய கூடிய  பயிற்சியாகும். இந்த சுவாசத் தியானம்  உடலுக்கு மிகுந்த பலனளிக்க கூடியதாகும்ஒரு முழு சுவாசத்தில் வளிமண்டல காற்றானது மூக்கு வழியாக, உள்ளே வந்து பின்னர்  சுவாசப்பைகளை அடைந்து பின்னர் வெளியேற்றப் படுகிறது. அது மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் சக்தியை பரப்பும். இந்த சுவாச தியானத்தை நாம் கவனமாக அனுபவித்து செய்தோமானால் மிக நல்ல செழிமையான வாழ்கையை பெறுவோம்.
 சுவாச உடற்பயிற்ச்சிக்காண செயல்முறைகள்: 
1. முதலில் நீங்கள் மிகவும் அமைதியான இடத்தில்       ஒரு துணி போட்டு அமர்ந்து கொள்ளவும். 
2.  உடலை தளர்த்தி உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். அதற்காக விறைப்பாக உட்காரக்கூடாது. 
3. பிறகு கண்ணை மூடி கொண்டு மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள்.  பின் மனதுக்குள்ளே 
  நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்    
  நான் மிகவும் செல்வந்தனாக  இருக்கிறேன்   
  நான் வாய் திக்காமல் மற்றவர்களிடம் பேசுகிறேன்    
  நான்  சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன்    என்று மனதுக்குள்ளே சொல்லி கொண்டே இருங்கள் 
4. பிறகு நீங்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த நேரங்களை நினைத்து பாருங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொது அலவற்ற் சக்தியை பெறுவீர்கள். அனவரையும் ஈர்ப்பீர்கள்.
 5. இப்போது மறுபடியும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதாவது மூச்சை மெல்ல இழுத்து பின் வெளி விடுங்கள். 
 6. இப்போது சற்றே அதிகமாக நீண்ட மூச்சை  இழுத்து பின் மெதுவாக வெளி விண்டுங்கள். 
 7.  மூச்சை இழுத்து விடும்போது நேர்மறையான  மற்றும்  மகிழ்ச்சியான எண்ணங்கள் மற்றுமே இருக்க வேண்டும். 
 இதே மாதிரி தினமும் 10 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தால், உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பெருகும். மன அழுத்தம் குறையும். நீங்கள் எந்நேரமும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.உங்களின் உடலில் சக்தி அதிகரிக்கும். 


Friday, March 13, 2015

புத்துணர்வு தரும் மூலிகை காபி
தேவையானவை: அதிமதுரம்  5 கிராம், அமுக்காரா கிழங்கு  10 கிராம்,  தனியா, சீரகம், சோம்பு  தலா 10 கிராம், சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம்  தலா 2 கிராம், கிராம்பு, ஏலக்காய்  தலா 4. எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்திப் பொடிக்கவும்.

செய்முறை: இந்தப் பொடியை கடாயில் போட்டு, பொன் நிறமாக வறுக்கவும். இந்தப் பொடியை காபி ஃபில்டரில் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி இறக்கவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கவும். அல்லது டம்ளரில் பொடியைப் போட்டு கொதிக்கும் நீரைவிட்டு சற்று நேரம் கழித்து டீ வடிகட்டியில் வடித்தும் சாப்பிடலாம்.

டாக்டர் பத்மபிரியா, சித்த மருத்துவர்: இந்த ஹெர்பல் காபி, கபத்தைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். வயிறு உப்புசம் இருந்தாலும், சட்டென சரியாகும்.  நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.  நரம்புக்குப் புத்துணர்ச்சி தரும்.  உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.
 

மூக்கின் வழியே இரத்தம்

மூக்கின் வழியே இரத்தப்போக்கு எற்படுவது குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவான நிகழ்ச்சி. பெரும்பாலான இந்த வகை இரத்தபோக்கு, மிதமாக இருப்பதனால் சிறிது நேரத்தில் தானாகவே நின்று விடுகிறது.எனினும், வயதானவர்களுக்கும், இரத்தத்தில் உள்ள குறைபாடுகள் போன்ற தீவிரமான காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு கடுமையாகவும், கட்டுப்படுத்த கடினமாகவும் இருப்பதுண்டு.
மூக்கின் வழியே ஏற்படும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இருபது நிமிடங்களுக்கும் மேலாக நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியமாகிவிடுகிறது.
காரணங்கள்:
பெரும்பாலான இரத்தபோக்கு மூக்கின் துவாரத்தின் மிக அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏற்படுகிறது. இந்த பகுதியில், அடர்த்தியான நுண்ணிய இரத்த நாளங்கள் பல இருப்பதால், அவை எந்தவகையிலாவது காயப்படும்பொழுது, எளிதில் கிழிபட்டு இரத்தம் வடிய நேர்கிறது. அவ்வாறு கிழிபட காரணங்களாக இருப்பவை ,
1 .மூக்கில் விரல் விடுவது.
2 . குளிர் காலங்களில் மூக்கின் உட்பகுதி காய்ந்து பொருக்கு தட்டி இருப்பது.
3 . மூக்கை கடுமையாக சிந்துவது
4 . பிற காரணங்களினால் ஏற்படும் காயங்கள்- சைனஸ் அழற்சி, சுவாசக் குழாய் நோய்தொற்று போன்றவை.
மேற்கொண்ட காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு பொதுவாக மிதமாகத்தான் இருக்கும்.
இவற்றை தவிர, இரத்தத்தில் உள்ள குறைபாடுகள், இரத்தத்தை இளக்கும் வார்பாரின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளுதல், இருதய கோளாறுகள், ஒவ்வாமை, மூக்கிலோ, இரத்ததிலோ புற்றுநோய் போன்ற காரணங்களினால் ஏற்படும் இரத்தபோக்கு கடுமையானதாக இருப்பதுண்டு.
சில சமயங்களில் மூக்கின் பின்பகுத்தியிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு, இது பெரும்பாலும் மூக்கிலோ, முகத்திலோ கடுமையாக அடிபடுவதினால் ஏற்படுகிறது.
மூக்கின் வழியே இரத்தம் வடியும்பொழுது என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான இரத்தப்போக்கு கீழ்கண்டவற்றை செய்வதினால் நின்று விடும்.
1 . தலைசுற்றலோ, மயக்கமோ இல்லாத பட்சத்தில், சிறிது முன்பக்கம் சாய்ந்தவாறு அமர வேண்டும்.
2 . கட்டை விரலையும், இன்னொரு விரலையும் பயன்படுத்தி மூக்கின் கீழ்பகுதியை , மூக்கின் துவாரம் முழுவதுமாக அடைபடும்படி அழுந்த பிடிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால், மூக்கின் கீழ்பகுதியில் உள்ள ரத்த  நாளங்கள் அழுத்தப்பட்டு  இரத்தக் கசிவு நின்றுவிடுகிறது.
3 . வாயில் கூடும் எச்சிலையும், இரத்தத்தையும் துப்பி விடவும்.
4 . இரத்த கசிவு முழுவதும் நின்ற உடன், மூக்கை சிந்துவதையோ, மூக்கில் விரல் விடுவதையோ தவிர்க்கவும். அப்படி செய்தால், அது மீண்டும் இரத்தபோக்கை ஏற்படுத்தி விடும்.

மருத்துவமனை போகவேண்டியது எப்போது?
இரத்தப்போக்கு கடுமையாக இருந்தாலோ, இருபது நிமிடங்களுக்கு மேல் நிற்காமல் வடிந்து கொண்டிருந்தாலோ, மயக்கம், படபடப்பு ஏற்பட்டாலோ,தீவிரமான பிற காரணங்களினால் இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவமனை செல்லவேண்டும்.
மருத்துவர் என்ன செய்வார்?
சாதாரண முதலுதவியினால் நிற்காத இரத்தபோக்கை நிற்க வைக்க பல்வேறு செய்முறைகள் கடைபிடிக்க படுகிறது. இரத்த நாளங்களை வெள்ளி நைட்ரேட் என்ற வேதியல் பொருளை கொண்டோ, மின்சாரத்தை கொண்டோ பொசுக்கி இரத்த கசிவை நிறுத்துவது, பேக்கிங் எனப்படும்  பஞ்சு உருண்டைகளை அழுந்த அடுக்குவது,  நேரடியாக இரத்த நாளங்களை கட்டி விடுவது போன்ற செய்முறைகள் தேவைக்கேற்ப கடைபிடிக்க படுகிறது. மற்ற காரணங்களினால் இரத்தப்போக்கு ஏற்படும் பட்சத்தில் அதற்கு ஏற்ற சிகிச்சை செய்யப்படும். தேவைபட்டால் இரத்தமும்  ஏற்றப் படும்.
மீண்டும் மீண்டும் மூக்கில் இரத்தம் வடிவது:
சிலருக்கு மூக்கில் இரத்தபோக்கு மீண்டும், மீண்டும் ஏற்படுவதுண்டு. பெரும்பாலும், மிதமாகவும், எளிதில் நின்றுவிடக்கூடியதாக இருந்தாலும்,  தினப்படி வாழ்கையை அசௌகரியப்படுத்தும் பட்சத்தில், மருத்துவரை அணுகலாம். காட்டறி எனப்படும், இரத்த நாளங்களை பொசுக்கும் செய்முறையின் மூலம் இந்த பிரச்சனைக்கு சிகிச்சை செய்யப்படும்.

பொதுவாக மிதமானதாக இருக்கும் மூக்கின் வழியே ஏற்படும் இரத்தப்போக்கு, அரிதான சமயங்களில் (கடுமையாக , தொடர்ச்சியாக  இருக்கும்போது) ஆபத்தாகக் கூடும்.  மூக்கில் இரத்தம் வடியும்போது அதை பதற்றமில்லாமல் கையாளத்தெரிவதும், ஆபத்தை அடையாளம் கண்டு பிடிக்க தெரிவதும் அவசியம்.


--
R.Madhavan
9790791445