சனி, 24 மே, 2014

ஆஸ்துமாவுக்கு நொச்சி

மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.

மருத்துவ குணங்கள்:
நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.
நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.
நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.
நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.
நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.
நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.
நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

உயரமாக வளர ...உட்கொள்ளவேண்டிய உணவுகள்

உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும். 

ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா








வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.








புரோட்டீன்

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.







வைட்டமின் டி

உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.








கால்சியம்

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்







கனிமச்சத்து

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

வெள்ளி, 23 மே, 2014

உணவு செரிமானம் அடைவதற்கு!

இன்றைய காலகட்டத்தில் மூளைக்கு மூளை பல உணவகங்கள் உருவாகிவிட்டன. அதுமட்டுமின்றி பல வகையான உணவு வகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உணவகங்களும், உணவு வகைகளும் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு பலவகையான உடல் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.
உடல் கோளாறு வரக்காரணம்
நமது உடல் நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றது  போல பக்குவப்பட்டுள்ளது. நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றது போல உணவு வகைகளை உருவாக்கி பரிணமித்து வந்துள்ளோம்.
எல்லா நாட்டு உணவு வகைகளும் அந்த அந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றார்போல உருவாக்கப்பத்தே. அப்படி இருக்கையில் நாட்டு தட்ப  தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உணவு. நம் நாட்டு தட்ப வெப்பத்திற்கு எப்படி ஒத்துப்போகும். இப்படியான சூழ்நிலைகளில் தான் நம் உடல் கோளாறில் சென்று முடிகிறது.
இப்படி பன்னாட்டு உணவு வகைகளை மாற்றி மாற்றி உண்பவர்களுக்கு பெரும்பாலும் வரும் பிரச்சினை செரிமானம் ஆகாமை. இப்பொழுது சித்தவைத்தியத்தில் சுலபமாக செரிமானம் ஆகா என்ன வழி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்
பூண்டு
செய்முறை
உணவு உண்ட பிறகு செரிமானம் ஆகாதது போல உணர்ந்தால் உடனே ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை சாப்பிட்டால். சுலபமாக செரிமானம் ஆகிவிடும்.

புதன், 21 மே, 2014

மூலிகை - வெற்றிலை

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.

சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.

பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.

வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.

ஞாயிறு, 18 மே, 2014

வலுவான எலும்புகள்




மனித உடலுக்கு உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த தாதுப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். நம் உடலில் கல்சியத்தின் பெரும்பகுதி, எலும்புகளிலும் பற்களிலும் காணப்படுகின்றன.
வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைக் கட்டியெழுப்புவதற்கு, கல்சியம் மற்றும் விட்டமின் டி என்பன மிக முக்கியமான இரண்டு ஊட்டச் சத்துகளாகும். விட்டமின் டி வளரும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். அது உணவிலிருந்து கிடைக்கும் கல்சியத்தை உங்கள் உடல் உறிஞ்சியெடுக்க உதவிசெய்கிறது. கல்சியம் இரத்ததிலும் காணப்படுகிறது. அது இரத்தத்தில் மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. எலும்புகள் ஒரு வங்கியைப் போன்றது, அது நாம் அன்றாட உணவில் உட்கொள்ளும் கல்சியம், எலும்பு வங்கியினுள் போடப்படுகிறது (storehouse of calcium). இரத்த அளவு எப்போதும் சாதாரண நிலையில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக எலும்பு வங்கி கல்சியத்தை இரத்தத்துக்கு அளிக்கிறது. நம் உடலில் இந்த இருப்பு போதியளவு இல்லாத போது, கால்சியம் எலும்புகளின் இருந்து திரட்டப்பட்டிருக்கிறது. இதனால் எலும்பின் அமைப்பு மெல்லியதாக ஏற்படுத்துகிறது. கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஓஸ்டியோபொராசிஸ்(osteoporosis) என்ற நோய் தாக்குகிறது. இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு பலமிழப்பு போன்றவை உண்டாகும்.
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்:-
கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது.
இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை. இதனால் இதயநோய்கள் உண்டாகிறது.
கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதனால் நகங்கள் வெளுத்து, பற்கள் தேய்மானம் அடையும். பற்களில் கூச்சம், பற்சிதைவு ஏற்படும்.

கால்சியம் உறிஞ்சு, மேம்படுத்தம் காரணிகள்:-
  • கல்சியத்தைப் போலவே விட்டமின் ‘டி’ யும் வளரும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். உங்கள் உணவிலிருந்து கிடைக்கும் கல்சியத்தை உங்கள் உடல் உறிஞ்சியெடுக்க அது உதவிசெய்கிறது.
  • ஹைட்ரோகுளோரிக் அமில pH குறைப்பின் மூலம் கால்சியம் உறிஞ்சு உதவுகிறது.
  • சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விட்டமின் டி யை உருவாக்கமுடியும். பத்து முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின் டி சூரியனிலிருந்து கிடைக்கும்.
கால்சியம் உறிஞ்சு, குறையும் காரணிகள்:-
  • வைட்டமின் டி குறைபாடு கால்சியம் உறிஞ்சு குறையும் முடியும்.
  • அதிக கொழுப்பு வெளியேற்றத்தை மேலும் கால்சியம் உறிஞ்சு குறையும் காரணமாகும்.
கால்சியம் சத்துநிறைந்த பொருட்கள்:-
  • பால் மற்றும் பால் பொருட்கள் கால்சியம் மிகுதியாக கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பால் அருந்துவது நல்லது.
  • பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
  • பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள்,முளைகட்டிய பயறு வகைகளில் அதிக கால்சியம் உள்ளது.
  • காலிபிளவரில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.
தேவையான கால்சியம் சத்து:-
7 முதல் 12 மாத குழந்தைக்கு – 270 மி.கி.
1 முதல் 3 வயது வரை – 500 மி.கி.
4 முதல் 8 வயது வரை – 800 மி.கி.
9 முதல் 13 வயது வரை – 1300 மி.கி.
14 முதல் 18 வயது வரை – 1300 மி.கி.
19 முதுல் 40 வயது வரை – 1200 மி.கி
40 முதல் – 1100 மி.கி.

கருஞ் சீரகம் பயன்கள்


கருஞ் சீரகம்
ஆயுர்வேதம், யுனானி மருந்துவங் களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய வைத்தியத்தின் தந்தையான ஹிப்போ கிராடிஸ் (Hippocrates) மற்றும் டியோஸ் கோரைடீஸ் (Dioscoridess) பிளினி (Pliny) இவர்களாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாவரவியல்
1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
 2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி
தாவர விவரங்கள்
அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை. சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாகவும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.
பயன்படும் பாகம்:  விதைகள்
பயிராகும் விவரங்கள்: இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.
விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.
செயல்பாடு - வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.
பயன்கள்
•  கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• சித்த வைத்திய பாடல் ஒன்று சொல்வது "கருஞ்சீரகத்தான் கரப்பனோடு புண்ணும்  வருஞ்சிராய் பீநசமு மாற்றும் - அருந்தினால் காய்ச்சல் தலைவலியுங் கண் வலியும் போமுலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை”
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது. 
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
Note: கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில்  கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.