செவ்வாய், 16 செப்டம்பர், 2014

வாய் துர்நாற்றம்.

எவ்வளவு தான் விலை உயர்ந்த உடை அணிந்திருந்தாலும் நாம் பேசும் போது வாய் துர்நாற்றம் வீசுமெனில், அது மற்றவரை முகம் சுளிக்க வைக்கும்.

பெருஞ்சீரகம்

வழக்கமாகவே நாம் உணவு உண்ட பின் அஜீரணத்தை விரட்டும் பொருட்டு, நாம் பெருஞ்சீரகத...்தை மெல்லுகிறோம். ஆனால் அவை சிறந்த வாய் புத்துணர்வூட்டிகள் என்பது நாம் அறியாத ஒன்று. அவை நமது உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும்.மேலும் துர் சுவாசத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடும். ஏப்பம் வருவது மற்றும் ரீஃப்லெக்ஸ் அமிலம் உருவாவதை குறைக்கிறது. நமது சுவாசத்திற்கு இயற்கையாகவே இனிமையூட்ட சில பெருஞ்சீரகத்தை மென்று துர்நாற்றத்தை விரட்டலாம்.

புதினா

சந்தையில் கிடைக்கின்ற பெரும்பாலான, சுவாச புத்துணர்வூட்டிகள், புதினாவை முக்கிய மூலப்பொருள் ஆக கொண்டுள்ளன. உணவை அலங்கரிப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. தனது வலிமையான குளிர்ச்சியூட்டக்கூடிய பண்பினால் நமது சுவாசத்திற்கு உடனடியான புத்துணர்வை வழங்குகிறது. நாம் சில பச்சையான இலைகளை மெல்லுவதன் மூலமும் அல்லது புதினா டீ அருந்துவதன் மூலமும் துர்நாற்றத்தை விரட்டலாம்.

பார்ஸ்லி

நமது உணவை அலங்கரிக்க பயன்படும் பார்ஸ்லி உபயோகமற்றது என்றே நாம் எண்ணுகிறோம். கிருமிகளுடன் போரிடும் பண்பினையுடைய குளோரோஃபில் பார்ஸ்லியில் நிறைந்துள்ளது. நாம் உணவு உண்டு முடித்த பின் நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிக சிறந்த சுவாச புத்துணர்வூட்டி. அதனால் தான் சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் சுவாச புத்துணர்வூட்டிகளில் இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு

நம் உணவிற்கு மணத்தையும் சுவையையும் கூட்ட நாம் கிராம்பினை பயன்படுத்துகிறோம். இது பல்வலியை குறைக்க பயன்படுகிறது. மேலும் பற்பசை மற்றும் மௌத் வாஷ்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த துர்நாற்றத்தை அகற்றும் பொருள் .கிராம்பில் பாக்டீரியா எதிர்ப்பு யூஜினால் நிறைந்துள்ளது. இவற்றை மெல்லுவதன் மூலம் சுவாசத்திற்கு புத்துணர்வூட்டலாம்.

பட்டை

பட்டை பாக்டீரியா எதிர்ப்புக் குணம் நிறைந்துள்ள நறுமண பொருட்களில் ஒன்று. மேலும் இது கெட்ட சுவாசத்தை குறைக்கிறது. நாம் சில பட்டைகளை மெல்லுவதன் மூலமோ அல்லது தேனீரில் சேர்த்து அருந்துவதன் மூலமோ வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம் அல்லது சில பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர விட்டு மவுத் வாஷாக பயன்படுத்தலாம்.

ஏலக்காய்

ஏலக்காய் விதைகளின் நறுமணத்துடன் கூடிய இனிய சுவை நமது சுவாசத்திற்கும் இனிமையூட்டுகிறது. ஒரு ஏலக்காயை நமது வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், துர்நாற்றத்தை விரட்டலாம். ஆகவே நமது உணவினை ஏலக்காய் டீயுடன் முடிப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் உமிழ்நீர் சுரப்பியை தூண்டி உமிழ்நீர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது. பல் காரையினால் உருவாகின்ற அமிலங்களை உமிழ்நீர் செயலிழக்க செய்கிறது. இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் வாயில் எஞ்சியுள்ள உணவு துகள்களையும் அகற்றுகிறது.

சோம்பு

இவை இனிப்பு உணவு மற்றும் வேக வைத்த உணவு வகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தும் பொருளாகும். மதுவிற்கு மணமூட்ட இவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த விதைகளில் நிறைந்துள்ள அனித்தோல், இவற்றிற்கு இனிப்பான மற்றும் நறுமண பண்புகளை வழங்குகிறது. சோம்பு விதைகளின் பாக்டீரியா எதிர்ப்பு குணத்துடன் கூடிய நறுமணம், அவற்றை பயனுள்ள சுவாச புத்துணர்வூட்டி ஆக்குகிறது. நாம் அவற்றை நமது வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கொதிக்க வைக்கப்பட்ட நீரில் ஊற வைத்து, இயற்கையான சுவாச புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி அல்லது தனியா

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவு பொருட்கள் நமது வாயில் துர்நாற்றாத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் கொத்தமல்லியின் மனம் அந்த துர்நாற்றத்தை மறைக்க உதவும். வாய் துர்நாற்றாத்தினை தவிர்க்க உணவிற்கு பின் சில கொத்தமல்லி இலைகளை மெல்லலாம். மேலும் வறுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய் புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

 

 

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்






இறப்பை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நோய்க்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நிறைய மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பிற்கு ஆளாகின்றனர்
.
ஆனால் உண்மையில் இந்த நோயை உணவுகளாலேயே குணப்படுத்திவிட முடியும். குறிப்பாக ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் சரிசெய்துவிடலாம்
.


சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்


அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள்
.
இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது
.


தக்காளி


தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது
.


மஞ்சள்


மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்
.


சிட்ரஸ் பழ ஜூஸ்


ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்
.


காய்கறிகள்



காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்
.


பசலைக் கீரை


பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால் அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது
.


பூண்டு


பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது
.


காளான்


காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.

 

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

 

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

 

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

 


--
R.Madhavan
9790791445







--
R.Madhavan
9790791445




நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!


மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணீர் மருத்துவம்
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பக்கவிளைவு கிடையாது
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.
முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.
தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!

பப்பாளியின் மருத்துவ குணங்கள்




ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்….



யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

1.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

3.பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

4.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

5.பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

6.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

7.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

8.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

9.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

10.பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

11.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும

12.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.






சனி, 16 ஆகஸ்ட், 2014

பலாக்காய் - மருத்துவக் குணங்கள்




மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்
பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.
குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.
பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.



பலாக்காய்

மருத்துவக் குணங்கள்:
பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.
குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.
பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.

பலாப்பழம் - மருத்துவப் பயன்கள்




மருத்துவப் பயன்கள்:

* பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சீராகச் சாப்பிட வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

* பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

* தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

* பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

* பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

* பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

முளைக்கீரை



கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கருஞ்சீரகம்

kalwanji_Pnnaiyar

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன

சப்போட்டா பழம் - மருத்துவ பயன்கள்

 

 

மருத்துவ பயன்கள் 


  • சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும்.
  • சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும்.
  • சப்போட்டா பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை, உறுதி இவற்றைத் தரும்.

  • சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும்.

  • சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
  • சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். 
  • கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
  • சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ்குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.
  • பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்தமயக்கத்திற்கும் இது நல் மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும். 
  • சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.