வெள்ளி, 25 டிசம்பர், 2015

நீரிழிவு நோய் என்றால் என்ன?



 நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத் தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது.இங்கு இருந்து தான் இன்சுலின் .உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரை யின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்,மேலே குறிப்பிட்டுள்ள உபாதை களினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
 சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.
 நீரழிவு நோய் மூன்று வகைப்படும் வகை - 1: டயாபிடிஸ் வகை - 2: டாயாபிடிஸ் வகை - 3: ஜெஸ்டே~னல் டயாபிடிக்ஸ் வகை- 1: நீரழிவு நோய் இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pயnஉசநயள) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
 நீரிழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.
 நீரழிவு நோயின் அறிகுறிகள்:- சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.
 பொதுப்பண்புகள்:- உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை, அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
 இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும்.உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.
 சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.
 வகை- 1: நீரழிவு நோயின் குணாதிசியங்கள் பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
 இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
 உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.
 வகை- 2: நீரழிவு நோய் இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
 இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (pசழபசநளளiஎந) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.
 வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள் பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும் பொதுவாக இது பரம்பரை நோய் பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
 இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
 வகை - 3: ஜெஸ்டே~னல் நீரழிவு நோய்: கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் ஐஐ நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 
சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை.
 உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார்.
 அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருக்கறது.
 உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக்காரணிகளும் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பின்னணியில், அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிட்டால், அதனால் அவரது உடல் எடை அதிகரித்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் அடுத்ததாக, சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல் லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு பொதுவான அறிகுறி கள் சில இருக்கின்றன. அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த் துவதாக கருதப்படுகின்றன.
 இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்துகொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம்.
 இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க் கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்க ளில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையி லேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
 இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
 அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது.
 அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு, மற்றும் அவரது பெற்றோ ருக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார் மோகன்.
 யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.
 இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. நீரிழிவுநோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும் நீரிழிவு நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை பெருமளவில் தூண்டிவிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார் கள்.
 அதாவது விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி, மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி வாய்ப் புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக உருவாகி யிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக, கிராமம் சார்ந்த, விவசாய பொருளாதாரத்தை நம்பி யிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது அவர்களின் அன்றாட உடல் உழைப் பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.
 அடுத்ததாக, இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள், அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்கு வரத்துக்கான வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப் படுகிறது.
 விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப்பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது.
   அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு இருந்த நிலைமை மாறி, சராசரியாக ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு நோயை தூண்டும் காரணியாக அமையும் இப்படியாக வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில் இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும் கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
 அதாவது இந்தியர்களின் மரபு வழி உணவில் அரிசியுடன் கூட கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளும், பல் வேறு வகையான பருப்பு வகைகளும், கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் அளவும் திடீரென குறைந்து, சராசரியாக இந்தி யர்கள் சாப்பிடும் தினசரி உணவில், அரிசி சாதத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக மாறியிருப்பதாகவும், இது நீரிழிவு நோயை தூண்டும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் மருத் துவர்கள் கருதுகிறார்கள். மேலும், பீட்சா பர்கர் போன்ற சர்க் கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளின் அளவும் இந்த பிரச்சினையை அதிகப்படுத்துவ தாகவும் பார்க்கப்படுகிறது.
 இறுதியாக இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

வியாழன், 26 நவம்பர், 2015

வயிற்று நோயும் - மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

 

மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....
* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.
* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

Image result for blood sugar
சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
* சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?
* சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?
* சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.
* பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.
முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டர் செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.
சர்க்கரை நோய்:
நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாசெல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.
(ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.
(பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது). இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.
'ஏ'யும் 'பி'யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.
சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.
சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல. முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.
கேசம் முதல் நகம் வரை:
சர்க்கரை நோய் உச்சந்தலை கேசம் முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக்குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப் ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.
மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.
டயாபடிக் நெப்ரோபதி என்ற சிறுநீரகக் கோளாறு:
சிறுநீரகம், உடலிலுள்ள கழிவுகள் இது நாம் உண்ணும் உணவில் உள்ள செரிமானத்திற்கு பிறகு ரத்தத்திலுள்ள வேண்டாத வேதியியல் பொருட்களை உடல் உறுப்புக்களால் ஏற்கப்பட்டு மீதி தேவை இல்லாத கழிவுப் பொருட்களான யூரியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுவது நெப்ரான் என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடி. இது கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். இது கெட்டுவிட்டால் யூரியா, கிரியாட்டின் மேலும் பொட்டாசியம் அதிகமாகி சிறுநீரகம் செயலிழக்கிறது. மூன்று மாதம் ஒரு முறை பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு துல்லியமாக சீராக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிய கிளைக்கேர் சுலேட்டு நிமோக்குளான் அளவு பார்த்து சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நெப்ரான் என்ற சிறுநீரக உறுப்பு மிகவும் முக்கியமானது. சர்க்கரை நோயினால் இது பாதிக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.
இதற்கு முக்கிய பரிசோதனைகளான எச்.பி.ஏ.சி., என்ற கிளைகோ சிலேட் ஹிமோகுளோபின் ரத்ததத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள குளுகோஸ் அளவை துல்லியமாக மூன்று மாதமாக எப்படி சர்க்கரை வியாதி இருந்திருந்தது என்பதைக் காட்டும். இது முக்கிய பரிசோதனை இரண்டாவது பரிசோதனை மைக்ரோ ஆல்பர்னியூரியா. இது சிறுநீரகத்தின் உயிர்நாடியான நெப்ரானின் செயல்பாட்டைக் குறிக்கும்.
ஸ்டிரோக்கை உண்டாக்கும்:
மூளையைத் தாக்கி, உடலில் உள்ள கை, கால்களை செயல் இழக்கச் செய்து தற்காலிக ஸ்டிரோக் அல்லது நிரந்தர ஸ்டிரோக்கை உண்டாக்கி உடலின் பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது. சர்க்கரை இதய நோய் பாதிப்பு உயிரைப் பறிக்கும். மற்ற உறுப்பு பாதிப்புகளினால் உயிர் உடனே போகாது. வாழ்க்கை பாதிக்கும் சர்க்கரை நோய் எத்தனை காலம், ஓராண்டாகி, ஐந்து, பத்து, இருபது ஆண்டா என்பதைப் பொறுத்து இதய தாக்கத்தை சொல்லலாம். முப்பது ஆண்டுகளில் பல நூறு கட்டுரை, பல புத்தகங்கள் சர்க்கரை நோயினால் வரும் இதய நோய்கள் பல உள்ளன. இதற்கு இந்த கட்டுரை போதாது. முக்கியமா இதய நோயைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மைக்ரோ ஆஞ்சியோபதி, பெரிய ரத்தக் குழாய்களை தாக்கி, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உண்டாக்குகிறது. கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளங்கள் பாதிப்பால் இதய தசைகளை பாதிக்கப்பட்டு இதய வீக்கம் ஏற்பட்டு மையோபதி என்ற வியாதி டயபடிக் கார்டியோ மையோபதி என்ற இதய வீக்க நோய் ஏற்படுகிறது. இதை சர்க்கரை நோய் கண்டுபிடித்த நேரத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

இதய நோயாளி சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்த வர்களும் சரி, பைபாஸ் செய்தவர்களும் சரி, ஸ்டென்ட், பைபாஸ் கிராப்ட் இவைகளை பாதுகாத்து வர வேண்டும்.
ஏன்?
சர்க்கரை வியாதி கண்டவர்களுக்கு கரோனரி ஸ்டென்ட்டும், பைபாஸ் கிராப்ட்டும் எளிதில் அடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு தாறுமாறாக ஏறும் இறங்கும். சர்க்கரை அளவும் கெட்டக் கொழுப்புகளான டி.எச்.எப்.,எல்.டி.எல்.,தான் காரணம்.
புது பரிசோதனை:
சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க இன்று வரை வெறும் வயிற்று சர்க்கரை அளவு பரிசோதனையும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு பரிசோதனையும் உடலில் குளுகோஸ் தாங்கும் திறனைக் கண்டுபிடிப்பது என்ற நிலை மாறி இப்போது சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை துல்லியமாக தெரிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பரிசோதனை எந்நேரமும செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு. 6 சதவீதம் சர்க்கரை நோய் இல்லை 6.5 சதவீதத்துக்கு மேல் நோய் உள்ளது. இது எப்படி கரோனரி நோய்க்கு ஆஞ்சியோகிராம் கோல்டு ஸ்டென்டோ அதுபோல சர்க்கரைக்கு இது முக்கிய டெஸ்ட்.
ரத்தக்குழாய் அடைப்பு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப் பாட்டில் இருந்தால் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிய வேண்டும். (ஏ) ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை அடைப்பு இருக்கலாம். (பி) பத்து ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் 90 சதவீத அடைப்பு. ஒரு இடத்தில் அல்லது பல இடத்தில் அடைப்பு இருக்கலாம்.
(சி) 10 ஆண்டு முதல் 20க்குள் இருந்தால் அடைப்பு ஒரு இடத்தில் மட்டுமல்லாது ரத்தக் குழாய் முழுவதும் அடைப்பு இருக்கும். ஒரு குழாய் மட்டுமல்லாது பல குழாய் அடைப்பு இருக்கும். (டி) சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய் சிறுத்துப் போய் கரோனரி ரத்தக் குழாய் விட்டம் 2 மில்லி மீட்டர் அதற்கு குறைவாக இருக்கும். இது பரிதாபமான நிலை.

பைபாஸ் கிராப்ட் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீனஸ் கிராப்ட்டுக்கு சில காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கு மேல் வீனஸ் கிராப்ட் மூட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் வரை கிராப்ட் மூடாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
வீனஸ் கிராப்ட் இது இணைப்பு தான். லீமா, ரிமா என்ற ஆர்ட்டியல் கிராப்ட் கரோனரி ரத்தக் குழாய் போல் இயங்கும். வீனஸ் கிராப்ட் இணைப்பில் ரத்தம் உறைந்து மூடிவிடும். வீனஸ் கிராப்ட் நாளாவட்டத்தில் செயலிழக்கும். இந்த ஸ்டென்ட் எளிதில் மூடிவிடும். மறு பைபாஸ் சிறந்தது. ஸ்டென்ட் அடைக்காமல், ஸ்டென்ட்டையும் மிகவும் பாதுகாக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.
சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்:
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பல விளைவுகளோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் வியாதி வந்தது என்று கவலைப்பட்டு சோம்பேறியாய் மூலையில் இருப்பது நல்லதல்ல. சலிப்பு, வெறுப்பு இவைகள் அதிகமாக தாழ்வு உணர்ச்சி மேலோங்கி தற்கொலைக்கு தூண்டும். பல் தேய்த்து, குளிப்பது போல சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு தடவை நினைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்

புதன், 9 செப்டம்பர், 2015

மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சிறந்த உணவுகள்.



சிலரது மனநிலை மிகவும் மந்தமாக, புத்துணர்ச்சியின்றி இருக்கும். இவற்றிற்கு காரணம் அதிகப்படியான வேலைப்பளுவும், அதிக கோபமும் தான் காரணம். மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹார்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும். இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து விடலாம்.

இத்தகைய ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்காக கஷ்டப்பட வேண்டாம். அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு, மனநிலையை சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்


ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்

வாழைப்பழம் 
ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக பாய வைக்கும். அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.


சூரியகாந்தி விதை 
சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. உண்மையில், இந்த பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடனே மனதிற்கு ஒருவித அமைதி கிடைத்து, மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தக்காளி 
தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும்.

கற்பூரவள்ளி 
கற்பூரவள்ளியில் காஃபியிக் ஆசிட், குவர்சிடின் மற்றும் ரோஸ்மாரினிக் ஆசிட் போன்றவை உள்ளது. இவை மனஇறுக்கத்தை குறைக்கும் பொருட்கள், எனவே கற்பூரவள்ளியை உணவில் சேர்த்து வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

டார்க் சாக்லெட் 
அனைவருக்குமே டார்க் சாக்லெட்டை நன்கு தெரியும். இதில் உள்ள அனடாமைன், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து, மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும். மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

முட்டை 
முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும்.

அஸ்பாரகஸ் 
அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோபேன் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஃபோலேட் அளவானது குறைவாக இருந்தால் தான், மந்தமான நிலை ஏற்படும். மேலும் ட்ரிப்டோபேன் என்னும் பொருளானது, செரோடோனின் அளவை அதிகரித்து, மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
பால் பொருட்கள்
 பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது. அநத் அமினோ ஆசிட்டுகள், உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தேன் 
இயற்கை இனிப்புகளுள் ஒன்றான தேன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேனில் உள்ள குவெர்செடின், மூளையில் உள்ள காயங்களை குணப்படுத்த வல்லது. மேலும் தேனை விரும்பி சாப்பிட்டால், மன அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஆரோக்கியத்துடன் இயங்கும். குறிப்பாக தேன், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும்.

தேங்காய்
 தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால், அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது.

மீன்
மீனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு, மீனை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

கார்போஹைட்ரேட்டுகள் 
கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டாலும், செரோடோனின் என்னும் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியானது அதிகரிக்கும். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான தானியங்களால் ஆன பிரட், ரொட்டி, பரோட்டா போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
காப்ஃபைன்
 அதிக டென்சனுடன் இருக்கும் போது, காப்ஃபைன் உள்ள காபி அல்லது டீ குடித்தால், நிச்சயம் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால், பின் அது கேடு விளைவிக்கும்.
இறைச்சி
 இறைச்சியிலும் போதுமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சசியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

இனிப்புகள்
 பொதுவாக வாய்க்கு சுவையாக இருக்கும் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால், அது எண்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து, மனதை மகிழ்ச்சியோடு வைக்கும். எனவே எந்த ஒரு இனிப்பு உணவுப் பொருளையும் அளவாக சாப்பிட்டு, நன்மையை பெறுவது நல்லது.
ஆரஞ்சு ஜூஸ் 
ஃபோலிக் ஆசிட் குறைபாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த குறைபாடு, செரோடோனின் அளவை குறைத்து, மனதை ஒருவித அழுத்தத்தில் உள்ளாக்கும். எனவே மந்தமான மனநிலை இருக்கும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கலாம்.
Best foods to keep your mind fresh!