வியாழன், 26 நவம்பர், 2015

வயிற்று நோயும் - மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

 

மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....
* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.
* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

Image result for blood sugar
சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
* சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?
* சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?
* சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.
* பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.
முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டர் செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.
சர்க்கரை நோய்:
நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாசெல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.
(ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.
(பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது). இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.
'ஏ'யும் 'பி'யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.
சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.
சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல. முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.
கேசம் முதல் நகம் வரை:
சர்க்கரை நோய் உச்சந்தலை கேசம் முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக்குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப் ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.
மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.
டயாபடிக் நெப்ரோபதி என்ற சிறுநீரகக் கோளாறு:
சிறுநீரகம், உடலிலுள்ள கழிவுகள் இது நாம் உண்ணும் உணவில் உள்ள செரிமானத்திற்கு பிறகு ரத்தத்திலுள்ள வேண்டாத வேதியியல் பொருட்களை உடல் உறுப்புக்களால் ஏற்கப்பட்டு மீதி தேவை இல்லாத கழிவுப் பொருட்களான யூரியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுவது நெப்ரான் என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடி. இது கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். இது கெட்டுவிட்டால் யூரியா, கிரியாட்டின் மேலும் பொட்டாசியம் அதிகமாகி சிறுநீரகம் செயலிழக்கிறது. மூன்று மாதம் ஒரு முறை பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு துல்லியமாக சீராக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிய கிளைக்கேர் சுலேட்டு நிமோக்குளான் அளவு பார்த்து சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நெப்ரான் என்ற சிறுநீரக உறுப்பு மிகவும் முக்கியமானது. சர்க்கரை நோயினால் இது பாதிக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.
இதற்கு முக்கிய பரிசோதனைகளான எச்.பி.ஏ.சி., என்ற கிளைகோ சிலேட் ஹிமோகுளோபின் ரத்ததத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள குளுகோஸ் அளவை துல்லியமாக மூன்று மாதமாக எப்படி சர்க்கரை வியாதி இருந்திருந்தது என்பதைக் காட்டும். இது முக்கிய பரிசோதனை இரண்டாவது பரிசோதனை மைக்ரோ ஆல்பர்னியூரியா. இது சிறுநீரகத்தின் உயிர்நாடியான நெப்ரானின் செயல்பாட்டைக் குறிக்கும்.
ஸ்டிரோக்கை உண்டாக்கும்:
மூளையைத் தாக்கி, உடலில் உள்ள கை, கால்களை செயல் இழக்கச் செய்து தற்காலிக ஸ்டிரோக் அல்லது நிரந்தர ஸ்டிரோக்கை உண்டாக்கி உடலின் பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது. சர்க்கரை இதய நோய் பாதிப்பு உயிரைப் பறிக்கும். மற்ற உறுப்பு பாதிப்புகளினால் உயிர் உடனே போகாது. வாழ்க்கை பாதிக்கும் சர்க்கரை நோய் எத்தனை காலம், ஓராண்டாகி, ஐந்து, பத்து, இருபது ஆண்டா என்பதைப் பொறுத்து இதய தாக்கத்தை சொல்லலாம். முப்பது ஆண்டுகளில் பல நூறு கட்டுரை, பல புத்தகங்கள் சர்க்கரை நோயினால் வரும் இதய நோய்கள் பல உள்ளன. இதற்கு இந்த கட்டுரை போதாது. முக்கியமா இதய நோயைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மைக்ரோ ஆஞ்சியோபதி, பெரிய ரத்தக் குழாய்களை தாக்கி, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உண்டாக்குகிறது. கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளங்கள் பாதிப்பால் இதய தசைகளை பாதிக்கப்பட்டு இதய வீக்கம் ஏற்பட்டு மையோபதி என்ற வியாதி டயபடிக் கார்டியோ மையோபதி என்ற இதய வீக்க நோய் ஏற்படுகிறது. இதை சர்க்கரை நோய் கண்டுபிடித்த நேரத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

இதய நோயாளி சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்த வர்களும் சரி, பைபாஸ் செய்தவர்களும் சரி, ஸ்டென்ட், பைபாஸ் கிராப்ட் இவைகளை பாதுகாத்து வர வேண்டும்.
ஏன்?
சர்க்கரை வியாதி கண்டவர்களுக்கு கரோனரி ஸ்டென்ட்டும், பைபாஸ் கிராப்ட்டும் எளிதில் அடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு தாறுமாறாக ஏறும் இறங்கும். சர்க்கரை அளவும் கெட்டக் கொழுப்புகளான டி.எச்.எப்.,எல்.டி.எல்.,தான் காரணம்.
புது பரிசோதனை:
சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க இன்று வரை வெறும் வயிற்று சர்க்கரை அளவு பரிசோதனையும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு பரிசோதனையும் உடலில் குளுகோஸ் தாங்கும் திறனைக் கண்டுபிடிப்பது என்ற நிலை மாறி இப்போது சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை துல்லியமாக தெரிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பரிசோதனை எந்நேரமும செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு. 6 சதவீதம் சர்க்கரை நோய் இல்லை 6.5 சதவீதத்துக்கு மேல் நோய் உள்ளது. இது எப்படி கரோனரி நோய்க்கு ஆஞ்சியோகிராம் கோல்டு ஸ்டென்டோ அதுபோல சர்க்கரைக்கு இது முக்கிய டெஸ்ட்.
ரத்தக்குழாய் அடைப்பு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப் பாட்டில் இருந்தால் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிய வேண்டும். (ஏ) ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை அடைப்பு இருக்கலாம். (பி) பத்து ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் 90 சதவீத அடைப்பு. ஒரு இடத்தில் அல்லது பல இடத்தில் அடைப்பு இருக்கலாம்.
(சி) 10 ஆண்டு முதல் 20க்குள் இருந்தால் அடைப்பு ஒரு இடத்தில் மட்டுமல்லாது ரத்தக் குழாய் முழுவதும் அடைப்பு இருக்கும். ஒரு குழாய் மட்டுமல்லாது பல குழாய் அடைப்பு இருக்கும். (டி) சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய் சிறுத்துப் போய் கரோனரி ரத்தக் குழாய் விட்டம் 2 மில்லி மீட்டர் அதற்கு குறைவாக இருக்கும். இது பரிதாபமான நிலை.

பைபாஸ் கிராப்ட் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீனஸ் கிராப்ட்டுக்கு சில காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கு மேல் வீனஸ் கிராப்ட் மூட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் வரை கிராப்ட் மூடாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
வீனஸ் கிராப்ட் இது இணைப்பு தான். லீமா, ரிமா என்ற ஆர்ட்டியல் கிராப்ட் கரோனரி ரத்தக் குழாய் போல் இயங்கும். வீனஸ் கிராப்ட் இணைப்பில் ரத்தம் உறைந்து மூடிவிடும். வீனஸ் கிராப்ட் நாளாவட்டத்தில் செயலிழக்கும். இந்த ஸ்டென்ட் எளிதில் மூடிவிடும். மறு பைபாஸ் சிறந்தது. ஸ்டென்ட் அடைக்காமல், ஸ்டென்ட்டையும் மிகவும் பாதுகாக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.
சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்:
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பல விளைவுகளோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் வியாதி வந்தது என்று கவலைப்பட்டு சோம்பேறியாய் மூலையில் இருப்பது நல்லதல்ல. சலிப்பு, வெறுப்பு இவைகள் அதிகமாக தாழ்வு உணர்ச்சி மேலோங்கி தற்கொலைக்கு தூண்டும். பல் தேய்த்து, குளிப்பது போல சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு தடவை நினைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்

புதன், 9 செப்டம்பர், 2015

மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சிறந்த உணவுகள்.



சிலரது மனநிலை மிகவும் மந்தமாக, புத்துணர்ச்சியின்றி இருக்கும். இவற்றிற்கு காரணம் அதிகப்படியான வேலைப்பளுவும், அதிக கோபமும் தான் காரணம். மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹார்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும். இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து விடலாம்.

இத்தகைய ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்காக கஷ்டப்பட வேண்டாம். அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு, மனநிலையை சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்


ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்

வாழைப்பழம் 
ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக பாய வைக்கும். அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.


சூரியகாந்தி விதை 
சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. உண்மையில், இந்த பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடனே மனதிற்கு ஒருவித அமைதி கிடைத்து, மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தக்காளி 
தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும்.

கற்பூரவள்ளி 
கற்பூரவள்ளியில் காஃபியிக் ஆசிட், குவர்சிடின் மற்றும் ரோஸ்மாரினிக் ஆசிட் போன்றவை உள்ளது. இவை மனஇறுக்கத்தை குறைக்கும் பொருட்கள், எனவே கற்பூரவள்ளியை உணவில் சேர்த்து வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

டார்க் சாக்லெட் 
அனைவருக்குமே டார்க் சாக்லெட்டை நன்கு தெரியும். இதில் உள்ள அனடாமைன், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து, மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும். மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

முட்டை 
முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும்.

அஸ்பாரகஸ் 
அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோபேன் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஃபோலேட் அளவானது குறைவாக இருந்தால் தான், மந்தமான நிலை ஏற்படும். மேலும் ட்ரிப்டோபேன் என்னும் பொருளானது, செரோடோனின் அளவை அதிகரித்து, மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
பால் பொருட்கள்
 பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது. அநத் அமினோ ஆசிட்டுகள், உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தேன் 
இயற்கை இனிப்புகளுள் ஒன்றான தேன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேனில் உள்ள குவெர்செடின், மூளையில் உள்ள காயங்களை குணப்படுத்த வல்லது. மேலும் தேனை விரும்பி சாப்பிட்டால், மன அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஆரோக்கியத்துடன் இயங்கும். குறிப்பாக தேன், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும்.

தேங்காய்
 தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால், அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது.

மீன்
மீனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு, மீனை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

கார்போஹைட்ரேட்டுகள் 
கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டாலும், செரோடோனின் என்னும் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியானது அதிகரிக்கும். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான தானியங்களால் ஆன பிரட், ரொட்டி, பரோட்டா போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
காப்ஃபைன்
 அதிக டென்சனுடன் இருக்கும் போது, காப்ஃபைன் உள்ள காபி அல்லது டீ குடித்தால், நிச்சயம் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால், பின் அது கேடு விளைவிக்கும்.
இறைச்சி
 இறைச்சியிலும் போதுமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சசியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

இனிப்புகள்
 பொதுவாக வாய்க்கு சுவையாக இருக்கும் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால், அது எண்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து, மனதை மகிழ்ச்சியோடு வைக்கும். எனவே எந்த ஒரு இனிப்பு உணவுப் பொருளையும் அளவாக சாப்பிட்டு, நன்மையை பெறுவது நல்லது.
ஆரஞ்சு ஜூஸ் 
ஃபோலிக் ஆசிட் குறைபாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த குறைபாடு, செரோடோனின் அளவை குறைத்து, மனதை ஒருவித அழுத்தத்தில் உள்ளாக்கும். எனவே மந்தமான மனநிலை இருக்கும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கலாம்.
Best foods to keep your mind fresh!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
ப்ராக்கோலி
ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.
பூண்டு
ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.
கேரட்
தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காளான்
காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.
நட்ஸ்
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.
பப்பாளி
தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.
அவகேடோ
அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.
திராட்சை
திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.
தக்காளி
உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்
1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பாகற்காய்.

bitter gourd க்கான பட முடிவு




உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது

புதன், 1 ஜூலை, 2015

வாய் புண்ணுக்கு ( Mouth Ulcer)

 


 

 
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

 
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்....

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.

மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்

திங்கள், 18 மே, 2015

தொண்டை புண் குணமாக

குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ் போட்ட குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.
இஞ்சி ஜூஸ்
இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.
பூண்டு ஜூஸ்
இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.
குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)
தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.
தக்காளி ஜூஸ்
தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புதினா ஜூஸ்
இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.
அன்னாசிப் பழ ஜூஸ்
அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.
கிவி ஜூஸ்
கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.
வாழைப்பழ ஜூஸ்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஆப்ரிக்காட் ஜூஸ்
தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.
மிளகு கசாயம்
மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.

சனி, 9 மே, 2015

நுரையீரல் சுத்தமாக.

Image result for lungs

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம். இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிட பச்சைக்கொடிதான். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

வெள்ளி, 8 மே, 2015

சர்க்கரை நோய் வராமல் தடுக்க சில கட்டளைகள்.

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.


Image result for brisk walking

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை.

நீரிழிவு  நோயுள்ளவர்கள் உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை எவை?
தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம்.
  1. தங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருதல்.
  2. தினமும் உடலுழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், அல்லது உடற் பயிற்சி செய்தல்,
  3. தங்களுக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்த மருந்துகளை ஒழுங்கான முறையில் உட்கொள்ளுதல் ஆகியவையே ஆகும்.
இக் கட்டுரையில் முக்கியமாக நீரிழிவாளர்களின் உணவு முறை பற்றியே பேச உள்ளோம்.
நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.
உணவின் கூறுகள்

எமது உணவில் பல கூறுகள் உள்ளன. மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், விற்றமின், தாதுப் பொருட்கள் ஆகியவையே அவை. பெரும்பாலான உணவுகளில் இக் கூறுகள் அனைத்துமே இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் சில கூறுகள் அதிகமாகவும் சில குறைவாகவும் இருக்கும்.
நாம் அதிகம் உண்பது மாப்பொருள் உணவுகளையே.அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற தானிய வகைகள் யாவுமே மாப்பொருள் உணவுகள்தான். உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற யாவற்றிலும் உள்ளது மாப் பொருள்தான்.
மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றிலும், பயறு பருப்பு, சோயா, கடலை, உழுந்து போன்ற அவரையின உணவுகளிலும் புரதம் அதிகம் உண்டு.
எல்லா வகை எண்ணெய்களும் கொழுப்பு சத்து மிகுந்தவை. பாலாடை, பட்டர், மார்ஜரீன், மிருக இறைச்சிகளிலுள்ள கொழுப்புப் பகுதிகள் போன்ற யாவும் அதிக கொழுப்புள்ள உணவுகளாகும்.
பழவகைகளிலும், காய்கறி வகைகளிலும் நார்ப்பொருள், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் செறிவாக உண்டு.
உணவு வகைகள்
இவ்வாறு உணவின் கூறுகள் பலவானாலும் வசதி கருதி நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவு வகைகளை மூன்று வகைகளாகத் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
1. விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
2. இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை
3. மிகக் குறைவாக உண்ண வேண்டியவை
விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை ஓரளவே உண்ண வேண்டும்.
இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை
பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.
சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.
தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு எடுக்க நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள் உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.
இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல. இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.
பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.
உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.
பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பேரீச்சம்பழத்தில் சீச்சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிகஅதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.
மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும். மாடடிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முடடையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை மட்டும் உண்ணலாம்.
மிகக் குறைவாக உண்ண வேண்டியவை
இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.
இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.
இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?
100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் ஸ்லப்பில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?
100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸகட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது
அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.
‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.
களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.
எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.
உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.
ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.