சனி, 22 ஜூன், 2013

அறுகம்புல் மூலிகை

 

நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள்,கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து.

அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம். சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம். அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.


அருகம்புல் வேரையும், புல்லையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கஷாயத்துடன் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக தினமும் காலை - மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக