- தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
- சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும் அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.
- ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்தரும்.
- இதன் பாலை நக சுற்றிக்கு தடவ குணமாகும்.
- சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர். இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும் பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும் அதைத் தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு வித்தைக் காட்ட இன்னும் பல மூலிகைகள் இருக்கிறது .
மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI, IYARKAI, healthtips, healthtips in tamil, healthtips, beautytips, #healthtips in hindi, மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள் (Health Tips in Tamil)..! முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI
வியாழன், 17 அக்டோபர், 2013
முலிகை - அம்மான் பச்சரிசி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக