Tuesday, February 11, 2014

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு  எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.
100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது. கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.

No comments:

Post a Comment