வியாழன், 26 ஜூன், 2014

மஞ்சள் பூசிம் ரகசியத்தை தெரிஞ்சிகொங்க

மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு.ஆனால் அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.

மருத்துவகுணம்
மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.
கொல்லப்படும் வைரஸ்
மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் மகிமை
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பூசுங்க
இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்..
அழகு தரும் மஞ்சள்
* தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.
* மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.
* பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
*பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
* சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
* தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.
* மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக