செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மருத்துவக் குறிப்பு



தினசரி பஞ்சகவ்யம் ஒரு கரண்டி சாப்பிட்டு வர புற்றுநோய் அணுகாது. புற்றுநோய் வந்தவர்களும் இதைச் சாப்பிட்டு வந்தால் குணமாகும். பசுவின் பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இவற்றைச் சம அளவில் கலந்தால் பஞ்ச கவ்யம் தயார். வெண்ணெய் கைவசம் இல்லாவிடில் பசுநெய் சேர்த்துக் கொள்ளலாம்.
கருணைக்கிழங்கு வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் சாகும். டி.பி. நோய் தீரும். வாந்தி வராமல் தடுக்கும். பசியைத் தூண்டும்.
இரவில் குழந்தை படுக்கையை நனைத்தால், எள்ளும் சிறிது முள்ளங்கியும் அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்த வர சிறுநீரின் அளவு குறையும். மூன்று நாள்களுக்கு ஒரு முறை கொடுத்துப் பார்த்து பக்க விளைவு ஏதேனும் ஏற்பட்டால் நிறுத்தி விடுவேண்டும்.
வெந்தயத்தை வறுத்து இடித்துப் பொடி செய்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி குறையும்.
வெள்ளை வெங்காயத்தைத் தட்டிச் சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் வலிப்பு அடங்கி விடும்.
சொத்தைப் பல் ஈறுகளில், வீக்கம், இருந்தால் ஓமம், கிராம்பு, கற்பூரம் சேர்த்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு சொத்தைப் பல்லில் வைக்கவும். ஈறு வீக்கதத்திற்கு இதே பொடியை வீக்கத்தின் மேல் பூசி 5 நிமிடங்களுக்குப் பிறகு வாய்க் கொப்பளிக்க பல் வலி, ஈறு வீக்கம் எல்லாம் குணமாகும்.
இரவு படுக்கப் போகுமுன் பசும்பாலில் தேனும், மஞ்சள் பொடியும் குங்குமப் பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஒரு வித மினுமினுப்பு தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக