வெள்ளி, 13 மார்ச், 2015

புத்துணர்வு தரும் மூலிகை காபி








தேவையானவை: அதிமதுரம்  5 கிராம், அமுக்காரா கிழங்கு  10 கிராம்,  தனியா, சீரகம், சோம்பு  தலா 10 கிராம், சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம்  தலா 2 கிராம், கிராம்பு, ஏலக்காய்  தலா 4. எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்திப் பொடிக்கவும்.

செய்முறை: இந்தப் பொடியை கடாயில் போட்டு, பொன் நிறமாக வறுக்கவும். இந்தப் பொடியை காபி ஃபில்டரில் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி இறக்கவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கவும். அல்லது டம்ளரில் பொடியைப் போட்டு கொதிக்கும் நீரைவிட்டு சற்று நேரம் கழித்து டீ வடிகட்டியில் வடித்தும் சாப்பிடலாம்.

டாக்டர் பத்மபிரியா, சித்த மருத்துவர்: இந்த ஹெர்பல் காபி, கபத்தைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். வயிறு உப்புசம் இருந்தாலும், சட்டென சரியாகும்.  நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.  நரம்புக்குப் புத்துணர்ச்சி தரும்.  உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக