வியாழன், 10 நவம்பர், 2016

தைராய்டு நோய் -பாட்டி வைத்தியம் .




1. பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.


2. தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். 

3. சத்து பவுடர்:

தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக