திங்கள், 28 ஆகஸ்ட், 2017

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்...


* உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது உடலில் உள்ள சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு உஷ்ணமான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
* எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும். உடல் பொலிவை அதிகரிக்கும். சருமம் மிருதுவாக இருப்பதற்கும் மிளிர்வதற்கும் உடலில் எண்ணெய் தேய்ப்பது உதவும்.
* நம்முடைய பாதமும் கண்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
* தொப்புள் நம் உடலின் முக்கியமான ஒரு புள்ளி. யூக்கலிப்டஸ் எண்ணெய், சாண்டல்வுட் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொப்புளை மசாஜ் செய்தால் நல்ல உணர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது தொப்புளில் எண்ணெய்விடுவதாலும் இந்தப் பலன் கிடைக்கும். தொப்புளில் தேங்காய் எண்ணெயைவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வோம்.
* குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் வரக்கூடிய தழும்புகளை மறையச் செய்ய ஆமணக்கு எண்ணெய் உபயோகமாக இருக்கும். பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
* நம் உடலில் அதிகம் உழைப்பைத் தரும் உறுப்புகள் கைகளும் கால்களும்தான். எண்ணெய் தேய்க்கும்போது, கட்டைவிரலில் எண்ணெய் வைப்பது அதன் வலிகளையெல்லாம் போக்கும். மேலும், மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதி பெறும்.
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக