செவ்வாய், 23 ஜூலை, 2013

அரிவாள்மனை பூண்டு அல்லது வெட்டுக்காயப்பூண்டு

 ஒரு செடியின் இலையை  கசக்கி அதன் சாறை காயத்தில் விட்டதும் ,சற்று நேரத்தில் இரத்தம் நின்று விட்டதுடன் வெட்டுக்காயமும் ஒட்டிக்கொண்டது!
புண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்க.
கூர்நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும்
சாலையோரங்களில் தானே வளரும். இலையே மருத்துவப் பயனுடையது. குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும்.

1. இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

2. இதனுடன் சமனளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்துப் புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து,
காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். உப்பு, புளி நீக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக