வியாழன், 25 ஜூலை, 2013

முலிகை - அதிமதுரம்

நன்கு உலர்ந்த இதன் தண்டு மருத்துவப் பயனாகும். சளியகற்றுதல், வெப்பகற்றுதல், ஆகியமருத்துவப் பயனுடையது.
1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.
2. அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர இரத்த வாந்தி நிற்கும். உள் உறுப்புகளின் புண் ஆறும்.
3. அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் சம அளவாகக் கொடுக்க நெஞ்சுச்சளி தீரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக