புதன், 29 மே, 2013

நன்றாக தூங்குவது எப்படி?


குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன், உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டவுடன் தூங்கினால் நள்ளிரவில் விழிப்பு வரும்.

 உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்று எதையும் குடிக்கக் கூடாது.

 படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்கவும் கூடாது.

 தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

 தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.

 மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும்.

 மதியம் அதிக நேரம் தூங்கினால் இரவு தூக்கம் பாதிக்கும்.

 தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்திக் கொள்ளவும்.

 உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி, ஜாலியாக இருக்கலாம்.

 டிவி, கம்ப்யூட்டர், நெட், மெயில் என்று மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

 தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம்.

 பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப்பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.

 படுக்கை அறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

 படுக்கும் அறையில் வேறு பொருட்கள் இருக்கக் கூடாது.

 நனைந்த உடைகள், உள்ளாடைகள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது.

 படுக்கும் அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

 தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும்.

 படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருக்கக் கூடாது.

 தூங்கும் அறையில் சத்தம் கூடாது. சத்தம் கேட்டபடி தூங்கினால் நல்லதல்ல. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அதிக ஸ்பீடு வேண்டாம். மிதமாக சுற்றினால் சீரான தூக்கம் வரும்.

 படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம்.

 தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

 மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

 தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும்.

 உறக்கம் வரவில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம்.

 நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள். மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வந்துவிடும்.

 படுத்தபடியே பார்க்கும் விதத்தில் சுவர் கடிகாரமோ, டிவியோ வைக்கக் கூடாது.

 விடுமுறை நாட்களில் ஓய்வு என்ற பெயரில் பகலில் தூங்குவது கூடாது. அப்படி செய்வதால் அடுத்த நாள் வேலை பார்க்கும் பொழுது தூக்கம் வரும்.

 ஒருநாள் சரியாக தூக்கமில்லாமல் இருந்தால் அதற்காக கவலை வேண்டாம். அதை நமது உடல் ஆட்டோமேட்டிக்காக ஏற்று கொள்ளும். ஆனால் அதையே தொடர்ந்தால்தான் பிரச்சினை.

 படுக்கையில் தூக்கம், செக்ஸ் இரண்டை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். படிப்பது, படுக்கையில் உட்கார்ந்து டிவி, கம்ப்ïட்டர், லேப்டாப் பார்ப்பது கூடவே கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக