சனி, 3 ஆகஸ்ட், 2013

இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகள்!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்க்க வேண்டும். பொதுவாக இத்தகைய சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த உலகில் சைவ உணவை மட்டும் சாப்பிடுவர்கள் இருக்கின்றனர். அத்தகையவர்களுக்கு அசைவ உணவிற்கு சரிசமமான இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பல இருக்கின்றன. பொதுவாக இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இந்த சத்து இருந்தால் தான், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும். இல்லையெனில் உடலில் இரத்தத்தின் அளவானது குறைந்து, இரத்த சோகை, ஞாபக மறதி போன்றவை ஏற்படும். அதிலும் இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது, அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்தானது எளிதில் உறிஞ்சப்படும். சரி, இப்போது அத்தகைய இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பசலைக் கீரை
பொதுவாகவே கீரைகளில் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.

உருளைக்கிழங்கு
அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சுவையில் மட்டும் சிறந்ததல்ல. உடலுக்கு இரும்புச்சத்தை கொடுப்பதிலும் சிறந்ததாக உள்ளது.

உலர் தக்காளி
சாலட், பாஸ்தா மற்றும் ஆம்லெட்டில் பயன்படும் உலர் தக்காளியிலும் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கிறது. அதிலும் ஒரு கப் உலர் தக்காளியில் 20% இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

கேல்
மாட்டிறைச்சியில் எப்படி அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதோ, அதேப் போல் கேல் (Kale) காய்கறியிலும், அதற்கு சமமான அளவில் இரும்புச்சத்து உள்ளது.

பருப்பு வகைகள்
சைவ உணவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது பருப்பு வகைகள் தான். எனவே பருப்பு வகைகளை தவறாமல் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்தானது அதிகம் கிடைக்கும்.

உலர் ஆப்ரிக்காட்
உலர் ஆப்ரிக்காட்டில், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

சுண்டல்
அனைவருக்குமே சுண்டலை தாளித்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். பருப்பு வகைகளிலேயே சுண்டலில் தான் அதிக அளவில் இரும்புச்சத்தானது அடங்கியுள்ளது.

டோஃபு
டயட்டில் இருப்பவர்களானால், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் இருக்கும் டோஃபுவை சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

பூசணிக்காய்
விதை இரத்த சோகையை தவிர்க்கவும், உடலில் இரும்புச்சத்தை சீராக வைக்கவும், பூசணிக்காய் விதைகளை ரோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும்.

பேரிச்சம் பழம்
தினசரி மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக