செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நிலாவரை ( கொலஸ்ட்ராலை கரைக்கும் )


udal paruman2-10

 
 

உடலில் இருக்கக்கூடி கொலஸ்ட்ராலை முழுமையாக கரைக்கும், உடல்பருமனை குறைக்கக்கூடிய தன்மை உண்டு. உடல்பருமன் என்பது ஒரு நாளிலேயோ, ஒருவாரத்திலேயோ, ஒரு மாதத்திலேயோ உண்டாவது கிடையாது. சிறிதுசிறிதாக ஏறக்கூடிய உடல்எடையை சிறிதுசிறிதாகத்தான் குறைக்கமுடியும். 90 கிலோ நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் முதல் ஆறுமாத காலத்திற்கு இந்த 90 கிலோவை தக்கவைக்க வேண்டும். 90 கிலோவை தக்கவைத்தப்பிறகு அதன்பிறகு சிறிதுசிறிதாக குறைக்கக்கூடிய வேலைகளில் ஈடுபடவேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் கூட பத்து மாதத்திற்கு பத்து கிலோ குறைக்கலாம். சிறிதுசிறிதாக குறைத்து வரக்கூடியதுதான் உடல் எடையை குறைக்குமே ஒழிய, சடாரென்று குறையும் எடை வேகமாக ஏறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நம் உடம்பில் 67 சதவிகிதம் நீராலானது, சில மருந்துகளை கொடுக்கும் பொழுது அதாவது பேதி மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, கொழுப்பைக்குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுக்கும் பொழுது சடாரென்று 4 கிலோ, 5 கிலோ குறையும், மறுபடியும் 10 கிலோ ஏற ஆரம்பித்துவிடும்.

எனவே அந்த மாதிரியெல்லாம் குறைக்காமல் பசியோடு இருந்து பழகுங்கள் அதாவது உணவு என்பது பசிக்கு மருந்தாக இருக்க வேண்டும், அந்தப் பசி இருக்கும் பொழுதே அரை வயிறாக சாப்பிடுவது, ஓரளவு சாப்பிடுவது, வயிறு முட்ட சாப்பிடாமல் இருப்பது இவற்றையெல்லாம் நாம் பழக்கப்படுத்தும்பொழுது உடல்பருமனிலிருந்து முழுமையாக மீளக்கூடிய சூழல் உண்டாகும். எந்த அளவிற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பட்டை தீட்டிய அரிசியைக் குறைத்துவிட்டு, நார்ச்சத்துள்ள சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி இவற்றையெல்லாம் பிரதான உணவாக மாற்றும் பொழுதும், கூடவே மக்காச்சோளம் போன்ற உணவை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் கண்டிப்பாக உடல்பருமனிலிருந்து விடுபடமுடியும். மிக எளிமையான விசயம் ஆனால் பழக்கப்படுத்துவதில்தான் எடைகுறைவதும், ஏறுவதும் இருக்கிறது. ஆக நான் சொன்னதைத் தொடர்ந்து செய்து வாருங்கள், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள், சித்தர்கள் கூறிய மருந்துபொருட்களையும் விடாமல் முறையோடு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வாருங்கள். உடல்பருமன் என்பதை குறைப்பது சாத்தியமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக