புதன், 8 ஏப்ரல், 2015

கசகசா மருத்துவம் -

 கசகசா மருத்துவம் க்கான பட முடிவு





கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து தேன் விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
கசகசாவை எருமை தயிரில் அரைத்து இரவு படுக்கப்போகுமுன் தினசரி தடவி வந்தால் முக சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.
தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.

 
ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தோப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
சகசாவை ஊற வைத்து அரைத்து தினதோறும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் மறையும்.

குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். இகசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு வற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி  காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்குவாக்விவர்த்தனம்அதாவது சொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக