செவ்வாய், 11 ஜூன், 2013

வெற்றிலை




  • வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.
  • தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
  • வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்


    1.  வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
    2. . வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
    3. . குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
    4. . வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
    5. . குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
    6. . வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
    7. . கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
    8. . வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
    9. . சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
    10. . குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
    11. . வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
    12. . நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
    13. . சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
    14. . நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.
    15. . வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
    16. . வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
    17. · வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.
    18. · வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
    19. · இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
    20. · புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
    21. · வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்

    பப்பாளி பழத்தின் அற்ப்புதம் - PAPAYA




    17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
    பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

    ... வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
    மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

    மருத்துவக் குணங்கள்:

    பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
    பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

    பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

    நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

    பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

    பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

    பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

    பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

    பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

    பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

    பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

    பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

    100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

    கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

    அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

    வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

    முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

    பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

    முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் - CABBAGE




    இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

    மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

    இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

    இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

    முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

    இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

    முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

    முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

    கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

    மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

    சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

    எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

    நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

    தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

    உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

    முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக.

    வல்லாரை





    இது கற்பக மூலிகைகளில் ஒன்றாகும். வாய்ப்புண், அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.

    வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும். வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்.

    வல்லாரை தோல் நோய்களுக்கு, குறிப்பாகத் தொழுநோய்க்கு நல்லது.தோல் நோய் தொந்தரவுகள் இருப்பவர்கள் தொடர்ந்து வல்லாரையை பயன்படுத்தி வந்தால் தோல்நோய் வெகு சீக்கிரத்தில் அகலும். நினைவாற்றலை பெருக்கும் ஆற்றல் வல்லாரைக்கு அதிகம் உண்டு .எனவே இந்த வல்லாரை இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக நான்கைந்து இலைகளை பறித்து உண்ணலாம்.

    வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

    மறதி நோயைக் கண்டித்து நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை மாணவர்களுக்கு ஒரு அரிய மூலிகையாகும். மூளையைப் பலப்படுத்து வதில் மிகவும் சிறந்தது இது. இன்று மருந்து கடைகளில் வல்லாரை கேப் ஸூல் நிறைய விற்பதிலிருந்து இதன் அரிய சிறப்பை நீங்கள்உணரலாம்.

    வல்லாரையை முதலாகக் கொண்டு வல்லாரை எண்ணெய், வல்லாரை நெய் முதலிய சித்த மருந்துகளும் செய்யப்படுகின்றன

    திங்கள், 10 ஜூன், 2013

    சுண்டைக்காய்

    நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்/ கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:

    சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.

    நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
    இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

    சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
           நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்/ கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:

    சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.

    நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
    இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

    சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்

    கூந்தல் பராமரிப்பு - செம்பருத்தி

    செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.
    ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 
     
    உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும். 
     
    சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. 
     
    இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். 
     
    செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும். 
     
    செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

    இயற்கை முறையில் மூட்டு வலி நிரந்தர தீர்வுகள் .

    மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:



    1. மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
    2. முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
    அறிகுறிகள்:
    மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பின்போ, வேலை செய்த பின்போ வலி அதிகமாகும்.
    முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது. நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். முழு உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
    காரணம்: அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
    முடக்குவாதம்: சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும், பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
    வைத்தியம்:
    1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
    2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
    3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
    4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
    5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
    6. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும்.(இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்).
    மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
    7. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
    உணவுப்பழக்கம்:
    1. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
    2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
    3. கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்
    தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

    சனி, 1 ஜூன், 2013

    மாம்பழத்தில் சத்துக்கள்


    பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.
    மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
    மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.
    மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.
    மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
    மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
    அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.
    எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
    100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.
    மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
    வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.
    நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

    புதன், 29 மே, 2013

    நடைப்பயிற்சி அவசியம் ஏன்?

    நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.
    கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
    எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

    ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

    இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.

    எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.

    நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.


    நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.

    பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு

    "ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன. பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

    நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.
    மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.

    ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
    75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.
    நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
    நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.
    நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

    சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.

    பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்

    புதினா

    புதினா  - ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

    புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

    புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

    ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

    புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

    சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

    மருத்துவம் : வேர்க்கடலை

    சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

    பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

    வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

    மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

    இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

    மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

    கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

    இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

    வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?

    ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
    வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச்சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

    விளாம்பழம் : பல வியாதிகளை குணப்படுத்தும்.

    இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.   எலும்புகளை பலப்படுத்தும்:   விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோபெரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.   வசியம் போக்கும்:   விளாம்பழத்தை ஒட்டோடு இருபத்தியொருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை மறந்து விடும். கெட்ட பெண்களினால் இடம்பெற்ற வசிய மருந்துகளும் முறிந்துவிடும்.   பழுக்காத விளாங்காயைத் தண்­ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியைகூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.   இதயத்திற்கு இதமளிக்கும்:   இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.   இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.   பித்தம் போக்கும்:   பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.   இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.   தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.   விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.   முகம் இளமையாக மாறும்:   வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.   இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.   விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.   மரப் பட்டையைப் பொடித்து தண்­ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.   பட்டுப்போன்ற கூந்தல்:   வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.   தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.   விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.   விளாம் மர இலையை தண்­ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்

    நன்றாக தூங்குவது எப்படி?


    குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன், உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

    தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டவுடன் தூங்கினால் நள்ளிரவில் விழிப்பு வரும்.

     உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்று எதையும் குடிக்கக் கூடாது.

     படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்கவும் கூடாது.

     தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

     தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

     தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.

     மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும்.

     மதியம் அதிக நேரம் தூங்கினால் இரவு தூக்கம் பாதிக்கும்.

     தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்திக் கொள்ளவும்.

     உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசி, ஜாலியாக இருக்கலாம்.

     டிவி, கம்ப்யூட்டர், நெட், மெயில் என்று மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

     தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம்.

     பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப்பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.

     படுக்கை அறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

     படுக்கும் அறையில் வேறு பொருட்கள் இருக்கக் கூடாது.

     நனைந்த உடைகள், உள்ளாடைகள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது.

     படுக்கும் அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

     தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும்.

     படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருக்கக் கூடாது.

     தூங்கும் அறையில் சத்தம் கூடாது. சத்தம் கேட்டபடி தூங்கினால் நல்லதல்ல. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அதிக ஸ்பீடு வேண்டாம். மிதமாக சுற்றினால் சீரான தூக்கம் வரும்.

     படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம்.

     தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

     மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

     தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும்.

     உறக்கம் வரவில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம்.

     நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள். மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வந்துவிடும்.

     படுத்தபடியே பார்க்கும் விதத்தில் சுவர் கடிகாரமோ, டிவியோ வைக்கக் கூடாது.

     விடுமுறை நாட்களில் ஓய்வு என்ற பெயரில் பகலில் தூங்குவது கூடாது. அப்படி செய்வதால் அடுத்த நாள் வேலை பார்க்கும் பொழுது தூக்கம் வரும்.

     ஒருநாள் சரியாக தூக்கமில்லாமல் இருந்தால் அதற்காக கவலை வேண்டாம். அதை நமது உடல் ஆட்டோமேட்டிக்காக ஏற்று கொள்ளும். ஆனால் அதையே தொடர்ந்தால்தான் பிரச்சினை.

     படுக்கையில் தூக்கம், செக்ஸ் இரண்டை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். படிப்பது, படுக்கையில் உட்கார்ந்து டிவி, கம்ப்ïட்டர், லேப்டாப் பார்ப்பது கூடவே கூடாது.

    கறிவேப்பிலை

    கறிவேப்பிலை ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.

    கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது. இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள். கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

    கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்.

    நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

    பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

    இவ்விலை உணவுக்கு ஒருவித நறுமணத்தைக் கொடுப்பதால் இந்தியர்கள் பெரும்பாலனவர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவில் குழம்பு, மிளகுநீர், நீர்மோர், தயிரலும் இதனை தாளிதம் செய்து சேர்ப்பார்கள்.

    சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. எனவே தான் இதற்கு கறிவேப்பிலை என பெயர் வந்தது.

    கறிவேப்பிலைக்கு மணமும், குணமும் சிறப்பாக இருப்பதால் துவையல் செய்தும் சாப்பிடலாம், இதில் காரப்பொடி செய்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிடலாம்.

    100 கிராம் கீரையில் 830 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 221 மில்லி கிராம் மக்னீசியச் சத்தும், 132 மி.கி, இரும்புச் சத்தும், 0.21 மி. கிராம் தாமிரச் சத்தும், 81 மி. கிராம் கந்தகச் சத்தும், 198 மி, கிராம் குளோரின் சத்தும் உள்ளன.

    உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.

    கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் 'சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.

    இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்.

    இந்த கீரையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கறிவேப்பிலை ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி சேர்த்து மூன்றுமுறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும். பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை மிகுதிப்படும்.

    உணவுடன் சேர்க்கப்படும் கறிவேப்பிலை இலைகளை உணவுக்கு மணம் ஊட்டிய பின் நீக்கிவிட வேண்டும் என்று தேவையில்லை. உணவோடு அதனைச் சேர்த்து உண்பதே சிறந்தது. இவ்வாறு உணவுடன் செல்லும் இந்த கறிவேப்பிலை மலத்தின் திராவம் சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். நல்ல பசி, ருசி, ஜீரண சக்தியைத் தரும். மலக்கட்டு வாயுக்கட்டுகளைப் போக்கி மலத்தை வெளியாக்கவல்லது.

    இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண உறுப்புக்களின் நண்பன் என்று கூறலாம்.

    இத்தனை சிறப்படைய கறிவேப்பிலையை தமிழ்பாடல் கீழ்கண்டவாறு அழகாக பாடப்பட்டுள்ளது.

    ‘கறிவேப்பிலையோ வேப்பிலை
    காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை’


    இந்த தாய்பிள்ளையான கறிவேப்பிலையை நாம் ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வருவோம்.

    செவ்வாய், 28 மே, 2013

    முடி அடர்த்தியாக வளர---இய‌ற்கை வைத்தியம்,

    ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.