திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விளக்கெண்ணெய் மருத்துவம்

விளக்கெண்ணெய்  5 முதல் 10மி.லி வரை குடிப்பதால் வயிறு கழியச் செய்து சுத்தமாகும்.
1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.
2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும்.
3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும்.
4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும்.
5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும்.
6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியின்மை மற்றும் வயிற்று வலி இவை குணமாவதோடு சீதள மிகுதியால் ஏற்பட்ட கோழைக்கட்டு, இரைப்பு மற்றும் இருமல் இவைகள் இல்லாமற் போகும்.
7. ஆமணக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் வலியுண்டாகச் செய்கின்ற கீல்வாயுகளுக்கும் மற்றும் வீக்கங்களுக்கும் ஒத்தடம் தர வீக்கமும் வலியும் தணிந்து போகும்.
8. ஆமணக்கு இலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு குடிக்கச் செய்து ஆமணக்கு இலைத் தீநீர் செய்து ஒற்றடம் தருவதாலோ அல்லது இலையை வதக்கி மார்பகங்களின் மேல் கட்டி வருவதாலோ பிள்ளை பெற்ற பெண்மணிகளுக்கு பால் நன்றாக சுரக்கும்.
10. சிற்றாமணக்கு இலையோடு சம அளவு கீழ்க்காய் நெல்லி சேர்த்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு சில நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். இப்படிப் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆமணக்கு நமக்கு சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும் தாவரமாகும். எண்ணெயும் எளிதில் கடைகளில் கிடைக்க கூடியதாகும். இதன் அருமை தெரிந்து மனதில் பதிந்து பயன் பெற வேண்டும்.
11. ஆமணக்கு எண்ணெயை ஒரு துணியில் நனைத்து மூட்டு வீக்கம் வலி கண்ட இடத்தின் மேற் சுற்றி அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை சுற்றி அதற்கும் மேலாக சுடு தண்ணீர் நிரப்பிய பாட்டிலால் ஒற்றடமிட மூட்டுவலி மற்றும் வீக்கம் ஆகியன குணமாகும்.

Buy this product here: https://amzn.to/3k96NoS

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்...


* உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது உடலில் உள்ள சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு உஷ்ணமான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
* எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும். உடல் பொலிவை அதிகரிக்கும். சருமம் மிருதுவாக இருப்பதற்கும் மிளிர்வதற்கும் உடலில் எண்ணெய் தேய்ப்பது உதவும்.
* நம்முடைய பாதமும் கண்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
* தொப்புள் நம் உடலின் முக்கியமான ஒரு புள்ளி. யூக்கலிப்டஸ் எண்ணெய், சாண்டல்வுட் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொப்புளை மசாஜ் செய்தால் நல்ல உணர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது தொப்புளில் எண்ணெய்விடுவதாலும் இந்தப் பலன் கிடைக்கும். தொப்புளில் தேங்காய் எண்ணெயைவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வோம்.
* குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் வரக்கூடிய தழும்புகளை மறையச் செய்ய ஆமணக்கு எண்ணெய் உபயோகமாக இருக்கும். பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
* நம் உடலில் அதிகம் உழைப்பைத் தரும் உறுப்புகள் கைகளும் கால்களும்தான். எண்ணெய் தேய்க்கும்போது, கட்டைவிரலில் எண்ணெய் வைப்பது அதன் வலிகளையெல்லாம் போக்கும். மேலும், மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதி பெறும்.
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

எலும்பின் வலிமையை அதிகரிக்க.....

எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.
அதிகாலை சூரிய உதயம்
சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள்.
பூண்டு மற்றும் வெங்காயம்
உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.
அதிகப்படியான புரதம் வேண்டாம்
இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.
அளவான டீ, காபி
சிலர் ஓர் நாளுக்கு பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது, எலும்பின் வலிமைக்கு நல்லதல்ல. எனவே, இவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இதற்கு மாற்றாக பால் குடிக்கலாம்.
உடற்பயிற்சி அவசியம்
எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், சிட்-அப்ஸ் அல்லது உங்கள் மாடி படிகளை அரை மணிநேரம் ஏறி, இறங்கினால் கூட போதும்.
உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்
ஃபுட் பால், பாஸ்கெட்பால், பேட்-மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுங்கள். இது, தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.
சோடா மற்றும் கோலா பானங்கள்
சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் பல்லை போட்டால் கரைந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது.
பால் உணவுகள் அவசியம்
பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.
ஆரோக்கியமான உணவு
உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.
புகை, மது
காலம், காலமாக நாம் கூறுவது தான். புகை மற்றும் மதுவை விட்டொழித்துவிடுங்கள். குறைந்த பட்சம், முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.

சனி, 8 ஜூலை, 2017

நலம் தரும் ஜாதிக்காய்




முகத்தை அழகாக்கும்:  ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்:  அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். தசைப்பிடிப்பை நீக்கும்:  ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும். ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும். 






வெள்ளி, 10 மார்ச், 2017

நுங்கு சிறப்புகள்





Image result for நுங்கு

யற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும்.

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத...்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளுமை தரும் நுங்கு:

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை:

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்:

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்:

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு:

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.


மாம்பழம் - மருத்துவ பயன்கள்

Image result for yellow mango tree


கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.

புதன், 21 டிசம்பர், 2016

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க

tomato க்கான பட முடிவு




பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம். 

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி

தேவையான பொருள்கள் : 

1.நல்லெண்ணெய் 
2.பூண்டு 
3.மிளகு 

செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம். 

வெள்ளி, 2 டிசம்பர், 2016

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் உணவுகள்:



இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

வாக்கிங் போங்க - நடை பயிற்சி தேவை

Image result for walking

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்.

சனி, 26 நவம்பர், 2016

பனங்கருப்பட்டி





பனங்கல்கண்டு மற்றும் கருப்பட்டியில் எண்ணற்ற விட்டமின்களும்,மினரல் சத்துக்களும் அடங்கியுள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே  உடலை குளிர்சியடையச் செய்யும். அதன் கிளைசீமி இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழ். இதனால் சர்க்கரை மற்றும் பல கோடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். கருப்பட்டியில் கலபினம்ஒட்டுரகம் இல்லைஉரம் பூச்சி மருந்து அடிக்கப்படுவதில்லைஅதை தயாரிக்கையில் விஷகெமிக்கல்கள்  சேர்க்கப் படுவதில்லைஈரலையோஉடலின் ஹார்மோன் அமைப்பையோ பாதிப்பதில்லைஎந்த நோயையும் வரவழைப்பதில்லைமாறாக வந்த நோயை போக்கி வரும் நோயையும் வரவிடாது விரட்டும்.போதை நோய் உண்டாக்குவதில்லைஒரு துளியும் பாதிப்பில் நம்மை தள்ளுவதில்லைமாறாக அமிர்தம் போல அனைத்து நலனையும் தருகிறது.சீர்கேட்டு இருக்கும் உடல் இயக்கத்தையும் சீரான சமநிலைக்கு கொண்டுவருகிறது

பெண்கள் பிரசவம் ஆனதிலிருந்து ஒருவாரத்திற்கு இந்த சுக்குகருப்பட்டியை இதேபோல்சீவி அதில் மிளகை பொடித்து போட்டு கொஞ்சம் பசு நெய் ஊற்றி லட்டுபோல் உருட்டி அரிசி சாதத்தில் போட்டும் அப்படியேவும்.. சாப்பிடுவார்கள் .. மேலும் வருத்து இடித்த எள்ளு பொடியை லட்டுடன் கலந்தும் சாப்பிடுவார்கள்...அப்படி சாப்பிடும் போது குழந்தை பிறந்தபின் கர்பப்பையின் உள்ளே மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களின் மிச்ச மீதங்கள் அனைத்தையும் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்

 எந்த சத்தும் இல்லாத இந்த சர்க்கரையை ஜீரணிக்கவே உங்கள் உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பிகால்சியம் போன்ற சத்துக்கள் உறுஞ்சி எடுக்கப்படும். இந்த சர்க்கரை பின்னர் குளுக்கோசாகவும்ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் உடலில் சாதாரணமாக ஜீரணிக்கப்படும். ஆனால் இந்த ப்ருக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுஈரலில் கொழுப்பு தேங்கி,அது இன்சுலின் சுரப்பை பாதித்து சக்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. ப்ருக்டோஸ் இன்சுலின் சுரப்பியை மட்டுமல்ல மூளைக்கு உணவு தேவை குறித்த தவறான தகவலை கொடுத்து (ஹார்மோன் சுரப்பை தடை செய்து) அதிகளவு உணவேடுக்க செய்கிறது. இதனால் உடல் பருமன் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம் இதய நோய்களின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம்சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்பட்ட பல்வேறு கெமிக்கல் விஷங்கள்உடலின் இயல்பு சமநிலையை பாதித்து பல்வேறு பெருவியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. ஹார்மோன் சுரப்பின சமநிலை தடுமாறுவதால் உடலின் மொத்த இயக்கத்திலேயே தடுமாற்றம் ஏற்படுத்துகிறது. கேன்சர்கர்ப்பப்பை,ஆண்மை-குழந்தையின்மைகிட்னி-கணையம் என்று உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பாதிக்கிறது.


இதற்கும் மேலாக இந்த விஷம்நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. மேலும்  சர்க்கரை என்பதே ஒரு போதையாக (Sugar Addiction) மாறிவருகிறது. நீங்கள் சர்க்கரை உடலில் சேர்க்காவிட்டால் உங்களால் இயல்பாக இருக்க முடியாதவாறு நம் புத்தி தடுமாறும். சர்க்கரையை உண்டால் சாராயத்தை விட மோசமான கெடுதல்களை செய்துவிடும்.

சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறதுஎன்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால்,
•           சர்க்கரை வியாதி
•           பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்)
•           இதயக்கோளாறு
•           உடல் பருமன் - கொலஸ்ட்ரால்
•           ஈரல் நோய்
•           சிறுநீரக-கிட்னி கோளாறுகள்
•           கனைய-சிறுநீரக கற்கள்
•           மனச்சோர்வு-பதற்றம்
•           மலச்சிக்கல்
•           குழந்தையின்மை
•           பொரிந்து போகும் எலும்புகள்
•           அல்சைமர் நோய்
•           நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம்
•           தாதுக்குறைபாடு
•           ஹார்மோன் கோளாறுகள்
•           நாட்பட்ட தலைவலி
•           மூட்டுதேய்மானம்
•           ஒட்டுக்குடல்
•           தசை பிறழ்வு நோய்
•           ஆஸ்துமா
•           கண் மற்றும் பல் கோளாறுகள்

இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.

கருப்பட்டியின் பயன்கள்


சர்க்கரை நோயாளிகள் பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சர்க்கரையை தீயில் போட்டால் தீயை அதிகரிக்கும். அதேசமயம் பனங்கருப்பட்டி தீயில் போட்டால் தீயை அணைக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன்,
கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்
தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய்
எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.


வெள்ளி, 11 நவம்பர், 2016

நகங்கள் - நோய்களைக் வெளிக்காட்டும்

Image result for human nail
கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே?  நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் ‘மொனிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு,  நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..
ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.
*  ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
*  சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.
* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
*  இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
*  நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.
*  இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
*  சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.
*  நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.  நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
*  நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
*  இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.
*  மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்
*  மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.
*  நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.
*  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
*  நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.
*  சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
*  நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
*  சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
*  சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
*  பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
*  ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்



Image result for onion
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.