சனி, 23 பிப்ரவரி, 2013

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்.

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்  இதோ:

* கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

* பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்

* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக