ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கண் பாதுகாப்பு

இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணிகளை  கொண்டு நம்முடைய கண்களைத் கண்டிப்பாக துடைக்கவே கூடாது.
 
கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது.
 
இவை அனைத்தும் கண்களைக் நாள் போகப்போக  பிரச்சனையை உண்டாக்கும்.எனவே காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது.
 
கண்களுக்கு வைட்டமின் 'ஏபி' சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழே கூறிய உணவுகளில் வைட்டமின் `ஏபி' அதிகமாக உள்ளது.
 
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏபி' அதிக அளவு உள்ளது.  
 
மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து அதிகமாக உள்ளது.
 
தெரிந்து கொள்ள வேண்டியது:
 
1. கண்ணிற்கும் தொண்டைக்கும் தொடர்பு உண்டு. 
 
2. கரு விழி மற்றும் வெள்ளை முழி வெளித்தோற்றத்தில் உள்ளது.
 
3. கண்களில் நீர் தேக்கம் பாரமாக இருக்கும் அவை நரம்புவை பாதிக்கும். 
 
4. கண்புரை வைட்டமின்  A குறைப்பாட்டால் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக