தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த விடயம். தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹோர்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர் ஜுலி லவ்குரோவ் கூறுகையில், இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும், முடிவு திருப்திகரமாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்று முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார். |
மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI, IYARKAI ,வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழலாம். மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI
Sunday, April 28, 2013
உடல் எடையை கட்டுப்படுத்தும் தக்காளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment